செய்திகள்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான இணைக் குழு தெரிவித்துள்ளது.

ஜுலை 8 முதல் அரபுக் கல்லூரிகளை ஆரம்பிக்க திணைக்களம் அனுமதி

நாட்டில் கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் முகமாக சுமார் 3 மாத காலமாக மூடப்பட்டிருந்த அரபு மத்ரஸாக்களை மீளத்திறப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க மத்ரஸாக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும்  8 ஆம் திகதி திறக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள்

கொவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லட் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 ஹஜ் : சவூதியின் தீர்மானத்திற்கு மார்க்க அறிஞர்கள் வரவேற்பு

உலக முஸ்லிம் லீக் அதன் கீழுள்ள இஸ்லாமிய நீதித்துறை சபை மற்றும் உலக பள்ளிவாயல்களின் உச்ச சபை ஆகியவற்றின் அறிஞர்கள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வருட  ஹஜ்ஜுக்காக சவூதி அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஸி ராஸிக்கை தடுத்து வைத்துள்ளமை சர்வதேச உடன்படிக்கையை மீறும் செயல்

ஏ.ஆர்.ஏ. பரீல் ஓய்வுபெற்ற அரச ஊழியரான ரம்ஸி ராசீக் தனது முக நூல் பக்கத்தில் ‘சிந்தனா ஜிஹாத்’ என்று பதிவிட்டதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையினை மீறியதற்காகவும் மற்றும் சைபர் குற்றங்கள் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு கடந்த 60 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். குற்றச் செயலுக்கான எவ்வித ஆதாரமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படவில்லை. இலங்கையின் அரசியல் யாப்பு 14(1)(a)யின் கீழ் ராசீக்கின் சுதந்திரமாக பேசுவதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் அவரது…

ஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் பங்கேற்கலாம் : சுகாதார அமைச்சு அனுமதி

ஐவேளை ஜமாஅத் உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
1 of 318