இலங்கையும், சவூதி அரேபியாவும் தங்களுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு மற்றும் நட்புறவினை 60க்கும் மேற்பட்ட துறைகளில் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.
கபூரியா அரபுக்கல்லூரி அதனைத் தோற்றுவித்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் அதன் உறுதியில் கூறப்பட்ட பிரகாரமும் அப்துல்கபூர் அறக்கட்டளையின் படியும் தொடர்ந்து அதன் சேவையினை சமூகத்திற்கு வழங்கும் அதேவேளை அதன் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வியையும் உறுதி செய்யும் என நம்பிக்கையாளர் சபை அறிவித்தல் வெளியிட்டபோதும் நோன்புகால விடுமுறையில் அனுப்பப்பட்ட 57 மாணவர்கள் இதுவரை கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் இயங்கி வந்த புத்தளம் அல் ஸுஹைரியா மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு வன்முறைகளை தூண்டும் வகையில் விரிவுரைகளை நடத்தியதாக கூறி இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை சி.ஐ.டி.யினர் தற்போது கைது செய்துள்ளமையானது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரவூப் ஹகீம் வாதிட்டார்.
தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.