புத்தளம் காதிக்கு எதிராக காதிகள் போரம் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0 105

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நீதிச் சேவைகள் ஆணைக்­குழு புத்­தளம் மற்றும் சிலாபம் நீதி நிர்­வாகப் பிரிவின் காதி­நீ­தி­ப­தி­யாக கட­மை­யாற்­றி­ய­வரை பதவி நீக்கம் செய்­தி­ருந்தும் குறிப்­பிட்ட காதி­நீ­திவான் தொடர்ந்தும் தனது பத­வியில் அமர்ந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஸ்ரீலங்கா காதி­நீ­தி­வான்­களின் சம்­மே­ளனம் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா காதி­நீ­தி­வான்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் இப்ஹாம் யெஹ்யா நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். குறிப்­பிட்ட கடிதத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘புத்­தளம் மற்றும் சிலாபம் நீதி­நிர்­வாகப் பிரிவின் காதி­நீ­தி­வா­னாக கட­மை­யாற்­றி­யவர் கடந்த மார்ச் 1ஆம் திகதி முதல் பத­வி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வெற்­றி­டத்­துக்கு பதில் கட­மை­யாற்­று­வ­தற்கு கல்­பிட்­டிய பிர­தேச காதி­நீ­திவான் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் நிய­மிக்­கப்­பட்டும் அவர் அப்­ப­த­வியை ஏற்­க­வில்லை.

இந்­நி­லையில் பத­வி­நீக்கம் செய்­யப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட காதி­நீ­திவான் தன்­வ­ச­முள்ள ஆவ­ணங்­களைப் பயன்­ப­டுத்தி வழக்­கு­களின் பிர­தி­வா­தி­க­ளுக்கு அழைப்­பாணை அனுப்­பு­வ­திலும், உத்­த­ர­வு­களைப் பிறப்­பிப்­ப­திலும், பிள்ளை தாப­ரிப்­பு­களைச் சேக­ரிப்­ப­திலும் ஈடு­பட்­டுள்ளார்.

குறிப்­பிட்ட காதி­நீ­தி­பதி பிரிவில் வாழும் மக்­களில் பலர் காதி­நீ­திவான் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­மையை அறி­யா­துள்­ளனர்.

இதன் கார­ண­மாக பொது­மக்கள் பெரு­ம­ளவில் பாதிப்­புக்­குள்­ளாகி வரு­கின்­றனர். பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்ள காதி­நீ­திவான் வழக்­கு­களில் சட்­ட­வி­ரோ­த­மாக தீர்ப்­பு­க­ளையும் வழங்கி வரு­கிறார். எனவே நீதிச் சேவை ஆணைக்­குழு இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டு உட­ன­டி­யாக குறிப்­பிட்ட பதவி விலக்­கப்­பட்­டுள்ள காதி­நீ­தி­வா­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்டிக். கொள்கிறோம்.

மேலும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் காதிநீதிமன்ற கட்டமைப்புக்குள் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கோருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.