கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை

முஸ்லிம் நாடே தஞ்சம் வழங்கியது என்பதை மறந்துள்ளார் என்கிறார் கபீர்

0 162

(எம்.ஆர்.எம்.வசீம்,இரா.ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில், கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ தான் எழு­திய புத்­த­கத்தில் முஸ்­லிம்கள், தமிழ் மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களே தன்னை விரட்­டி­ய­டித்­தனர் என்று குறிப்­பிட்­டுள்ளார். அவர் வர­லாற்றை தெரிந்­து­கொள்ள வேண்டும். சிங்­கள மன்­னர்கள் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மன்­னர்­களை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் நடந்­து­கொண்­ட­தில்லை. இதனை சிறு­பான்மை மக்­களின் சூழ்ச்­சி­யென்றே கூறு­கின்றார். இவை கோத்­தா­பய தனது பாவத்தை கழு­விக்­கொள்­வ­தற்­காக கூறும் பொய்­யாகும். சிறு­பான்மை மக்­களால் அவரை விரட்­டி­ய­டிக்க முடி­யுமா?

2019 ஜனா­தி­பதி தேர்தல் மேடையில் நாட்டை தன்­னா­லேயே மீட்க முடியும் என்றும், சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக கருத்­துக்­களை வெளி­யிட்டு இன­வா­தத்தை பரப்­பியே அவர் ஆட்­சிக்கு வந்தார். ஆனால் இறு­தியில் அவரின் பாது­காப்­பை­கூட அவரால் உறு­திப்­ப­டுத்த முடி­யாமல் போனது. சிங்­கள மக்­களின் வயிற்­றிலும் அவர் அடித்தார். இதனை தொடர்ந்தே போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. எரி­பொருள், எரி­வாயு பிரச்­சி­னை­களால் மக்­ககள் போராட்டம் நடத்­தினர். அதில் சிறு­பான்மை மக்­களும் கலந்­து­கொண்­டார்கள். ஆனால் அவரை சிறு­பான்மை மக்கள் மட்டும் விரட்­டி­ய­டிக்­க­வில்லை.

ஆனால் அவரின் புத்­த­கத்தில் சிறு­பான்மை மக்­களே அவரை விரட்ட நட­வ­டிக்கை எடுத்தனர் என்ற அவரின் கூற்று மிகவும் வெறுக்­கத்­தக்­க­தாகும். அவர் ஆட்­சியில் இருக்­கும்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு செயற்­பட்டார். குறிப்­பாக கொவிட் தொற்­றுக்­குள்­ளான முஸ்­லிம்­களின் சட­லங்­களை எரிக்­கும்­போது, அதனை செய்ய வேண்டாம் என உலக சுகா­தார அமைப்பு உள்­ளிட்ட அனைத்து நாடு­களும் கேட்­டுக்­கொண்­ட­போதும் அதனை கோத்­தா­பய ராஜ­பக்ஷ்வும் அதன் அர­சாங்­கமும் கண்­டு­கொள்­ள­வில்லை.

அதனால் கோத்­தாய ராஜபக்ஷ் தனது பத­வியை விட்டு செல்­வ­தற்கு முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்கள் திட்­ட­மி­ட­வில்லை. மாறாக இலங்­கை­யர்கள் என்­ற­வ­கையில் தனிப்­பட்ட ரீதியில் அந்த போராட்­டத்தில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பார்கள். ஆனால் கோத்­தா­ப­ய­வுக்கு ஏற்­பட்­டது இறை­வனின் சாபம் என்றே நான் நினைக்­கிறேன். சட­லங்­களை எரித்து முஸ்லிம் மக்­களின் உள்­ளங்­களை புண்­ப­டுத்­தினார். முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக கோத்­தா­பய ராஜபக்ஷ் செயற்­பட்­ட­போதும் இறு­தியில் அவ­ருக்கு தஞ்சம் வழங்க எந்த பெளத்த நாடும் முன்­வ­ர­வில்லை. மாலை தீவே அவ­ருக்கும் தஞ்சம் கொடுத்­தது. அதன் பின்னர் அங்­கி­ருந்து சவூதி விமான சேவை ஊடா­கவே சிங்­கப்­பூ­ருக்கு சென்றார். அப்­போது முஸ்­லிம்கள் யாரும் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை.

எனவே அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ளவே கோத்­தா­பய ராஜபக்ஷ் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எத­ிராக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்கொண்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதற்காக பயன்படுத்திக்கொண்டார். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கிடைக்கவில்லை. அதனால் கோத்தாபய ராஜபக் ஷ தனது புத்தகத்தில் எழுதியிருக்கும் பிழையான கருத்துக்களை திருத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது வரலாற்றில் பதிவாகும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.