ஊக்குவிக்கப்படவேண்டிய ‘வீட்டிலிருந்து ஒரு பார்சல்’ உணவு விநியோக திட்டங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிகள் இன்மை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அன்றாடம் ஒரு வேளை உணவு உண்பதற்குக் கூட கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.