பலஸ்­தீன மக்­களுக்கு உதவும் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­து­வோம்

0 133

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு மேலா­க அல்­லல்­­பட்டு வரும் மக்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்டுள்ள காஸா சிறு­வர் நிதி­யத்­திற்கு பல்­வேறு வழி­க­ளிலும் நிதி­யு­த­விகள் வழங்­கப்­பட்டு வரு­கி­ன்­றன. இதற்­க­மைய முதற்­கட்­ட­மாக ஒரு மில்­­லியன் டொலர் நிதி­யு­தவி அண்­மையில் உத்­தி­­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை சேக­ரிக்­கப்­ப­ட­வுள்ள நிதியும் அடுத்த கட்­ட­மாக வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ள­து.

இந்­நிதி யாரிடம் கைய­ளிக்­கப்­­ப­டு­கி­ற­து? இஸ்­ரே­லினால் முற்­று­கை­யி­டப்­பட்­டுள்ள காஸா­வுக்கு இந்­­நிதி சென்­ற­டை­­­யு­மா? என்ற கேள்­விகள் தற்­போது பல­ராலும் எழுப்­பப்­­ப­டு­கின்­றன. இது தொடர்பில் பொறுப்­புள்ள ஊடகம் என்ற வகையில் விடி­வெள்ளி சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களை தொடர்­பு­கொண்டு ஆராய்ந்­தது. இதற்க­மைய குறித்த நிதி­யா­னது காஸா­ மக்­க­ளுக்கு கிடைக்கக் கூடிய தரப்­பி­டமே கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை உறு­திப்­ப­டுத்­த முடி­ந்­தது. பலஸ்தீன தூத­ரக தக­வல்­களும் இதனை உறுதி செய்­த­ன.

பலஸ்­தீன விவ­கா­ரங்­க­ளுக்­கென ஐக்­கிய நாடுகள் சபையின் கீழ் பிரத்­தி­யே­க­மாக இயங்கும் பலஸ்­தீன அக­தி­க­ளுக்­கான ஐக்கிய நாடுகள் நிவா­ரண பணி­ய­­கத்தின் வங்கிக் கணக்­கிற்­­கே இலங்கை அர­சாங்கம் இந்­­நி­தியை அனுப்­பு­கி­றது. முதற்­கட்­ட­­மாக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட 1 மில்­லி­யன் டொலர் நிதி தமது வங்­கிக் கணக்­கிற்கு கிடைத்து விட்­ட­தாக இலங்கைக்­கான ஐ.நா. வதிவிட பிர­தி­நிதி மார்க் ஆன்ட்­ரே ப்ரான்ச் தெரி­வித்­துள்ளார். குறித்த நிதி சந்­தே­கத்­திற்கு இட­மின்றி காஸா மக்­க­ளுக்கு கிடைக்கும் என்­ப­தையும் அவர் உறு­திப்­ப­டுத்­­தி­னார்.

உண்­­மை­யில் ஜனா­தி­ப­தி­யின் ஆலோ­ச­னையில் தாபிக்­கப்­பட்ட இந்த நிதி­யத்­திற்கு பங்­க­ளிக்க இலங்கை மக்­கள் காட்­டி­வ­ரும் ஆர்வம் மெச்சத்­தக்­க­­தாகும். தன­வந்­தர்கள் மாத்­தி­ர­மன்றி ஏழை எளிய­வர்கள் கூட தம்மால் இயன்ற பங்­க­ளிப்­பு­களை நல்கி வரு­கின்­றனர். குறிப்­பாக முஸ்லிம் பகு­தி­களில் நிதி­தி­ரட்டும் பணிகள் பள்­ளி­வா­சல்கள் மூல­மாக முன்­னெ­டுக்­கப்­­ப­டு­கின்­றன. காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனத்தின் ஏற்­பாட்டில் இரு தினங்­க­­ளா­க முன்­னெ­டுக்­கப்­பட்ட நிதி சேக­ரி­ப்பின் மூலம் ஒரு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான நிதி சேக­ரிக்­கப்­பட்­­டமை சிறந்த முன்­மா­தி­ரி­யாகும். அதே­போன்று ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் மில்­லியன் கணக்கான ரூபா நிதி சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் பாட­சா­லைகள், வலயக் கல்வி அலு­வ­ல­கங்கள், வர்த்­தக நிறு­வ­னங்­களும் கணி­ச­மான பங்­க­ளிப்பைச் செய்­துள்­ள­ன.

இந்­­நி­­தியத்­திற்­கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பங்­க­ளிப்புச் செய்­யலாம் என ஜனா­தி­பதி செய­லகம் அறி­வித்­துள்­ளது. எனவே இது­வரை நிதி சேக­ரிக்­காத முஸ்லிம் பிர­தே­சங்­களில் எஞ்­சி­யுள்ள காலப்­ப­கு­தியில் நிதி­களை சேக­ரிக்க நட­வ­டிக்கை எடுப்­பது காலத்தின் தேவை­யாகும்.

ஒரு வேளை உண­வுக்குக் கூட அல்­ல­லுறும் எங்கள் பலஸ்­தீன சொந்­த­ங்­க­ளுக்கு எம்மால் முடிந்த உத­வி­களைச் செய்­வ­தற்கு கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்தை நாம் சரி­வரப் பய­ன்­ப­டுத்திக் கொள்ள முன்­வர வேண்டும். இந்த பெருநாள் காலங்­­களில் வீண் விர­ய­மான செல­வு­க­ளைக் குறைத்து காஸா உற­வு­க­ளுக்கு உதவிக் கரம் நீட்ட முன்­வர வேண்டும். இந்த நிதி உரிய வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­களைச் சென்­ற­­டையும் என்ற நம்­பிக்­கை­யுடன் நிதி திரட்டும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­போம். இந்தப் பெரு­­நாள் தினங்­களில் பலஸ்தீன மக்­க­ளுக்­காக பிரா­ரத்­திப்­போம்.

அனை­வ­­ரு­க்கும் புனித நோன்புப் பெருநாள் நல்­வாழ்த்­துக்கள். ஈத் முபா­ரக்!

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.