இன­வாத சக்­தி­க­ளுக்கு பாடம் புகட்­டி­யுள்ள நீதி­­மன்ற தீர்ப்­பு

0 322

பொது­ பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு நான்கு வருட சிறைத்­தண்­ட­னை அளித்து நீதி­மன்றம் வழங்­­கிய உத்­த­ரவு இலங்­கையில் இன, மத முரண்­பா­டு­களைத் தூண்­டிய, தூண்­டிக் கொண்­டி­ருக்­கின்ற, எதிர்­­கா­லத்தில் தூண்­டி­­விட எண்­ணி­யுள்ள அனை­வ­ருக்­கும் தகுந்த பாடமா­கும்.

2016 ஆம் ஆண்டு இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் மிக மோச­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டமை தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளான ரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் மற்­றும் அசாத் சாலி ஆகியோர் பொலிஸ் முறைப்­பாட்­டைப் பதிவு செய்­தி­ருந்­தனர். இதனை அ­டிப்­ப­டை­யாகக் கொண்டு சட்­ட­மா அதிபர் திணைக்­க­ளமே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இந்த வழக்கைப் பதிவு செய்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே கடந்த வாரம் இவ்­வ­ழக்கின் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டது. இதற்­க­மைய தேர­ருக்கு நான்கு வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத் தீர்ப்­புக்கு முன்­ன­ராக தேரர் தனது தவறை ஏற்­றுக் கொண்டு முஸ்லிம் மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வ­தா­க நீதி­மன்றில் அறி­­வி­ருத்­தி­ரு­ந்தார். எனினும் இந்த மன்னிப்புக் கோரல் மூலம் தான் செய்த தவறை மறைக்­கவோ தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்­கவோ முடி­யாது என தீர்ப்பை வழங்­கிய நீதிவான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

ஞான­சார தேரர் ஏலவே நீதி­மன்ற அவ­ம­திப்புக் குற்­றச்­சாட்டில் சிறைத்­தண்­­­ட­னை அனு­ப­வித்து வந்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பதவிக் காலத்தில் ஜனா­திப­தியின் பொது மன்னிப்பின் கீழ் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் தற்போதும் அவ­ருக்கு மன்­னிப்பு வழங்கி விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் ஆங்­கா­ங்கே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் பெளத்த மத பீடங்­க­ளி­ட­மி­ருந்தோ அல்­லது முக்­கிய அர­சியல் தலை­மை­க­ளி­ட­மி­ருந்தோ அவ்­வா­றான விடு­விப்பு கோரிக்­கைகள் எதுவும் இது­வரை முன்­வைக்­கப்­ப­ட­வில்­லை.

தனக்கு வழங்­கப்­பட்ட தண்­ட­னையை எதிர்த்து ஞான­சார தேரர் மேன்­மு­றை­யீடு செய்­துள்ளார். இது தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும். இதற்­கி­டையில் தற்­போது வெலிக்­கடை சிறைச்­சா­லையின் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள தேரரை பிணை­யில் விடு­விக்­கு­மாறு முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கையும் நீதின்­றினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­து.

நீதித்­துறை இந்த விவ­கா­ரத்தில் தீர்க்­க­மா­ன­தொரு நிலைப்­பாட்டில் இருப்­பது தெரி­கி­றது. இந்த வழக்கை ஆராய்ந்து தீர்ப்­ப­ளித்த நீதிவான் மிக நுணுக்­க­மாக இத­னுடன் தொடர்­பு­பட்ட சட்ட ஏற்­பா­டு­களை ஆராய்ந்­துள்ளார். அத்­துடன் இந்த நாட்டில் மதங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை நல்­லி­ணக்­கத்தை தோற்­று­விக்கப் பாடு­பட வேண்­டிய மதத்­த­லை­வர்­களே அவற்றை சீர்­கு­­லைக்கும் வகையில் நடப்­பதை அனு­ம­திக்கக் கூடாது என்­ப­திலும் நீதிவான் உறு­தி­யா­க­வி­ருந்­துள்ளார் என்­பதை இவ் வழக்கின் தீர்ப்பை வாசிக்­கும்­போது புரிந்து கொள்ள முடி­கி­ற­து.

உண்­மையில் இந்த தீர்ப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். இலங்­கையில் தேர்தல் ஒன்றில் வெல்­வ­தற்கோ அல்­லது வேறே­தேனும் தமது நோக்­கங்­களை அடைந்து கொள்­ளவோ இல­கு­வா­க இன­வா­தத்தை தூண்­டிவிடலாம் என்ற நினைப்பில் மண் அள்ளிப் போடு­வ­தாக இந்த தீர்­ப்பு அமைந்­துள்­ளது. இது இன­வாத சக்­திகள் அனை­வ­ருக்கும்­ நல்­ல­தொரு பாட­மா­கும்.

இருந்­த­போ­திலும் இந்த தீர்ப்­பையே துரும்­பாகப் பயன்­ப­டுத்தி எதிர்­காலத்தில் சில சக்­திகள் முஸ்­­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தத்தை தூண்டி விடக்­கூடும் என்ற எச்­ச­ரிக்­கை­களும் சில தரப்­பு­­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வ­ருடம் தேர்தல் ஆண்­டாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் தேர்­த­லுக்­கா­க இந்த நாட்டில் எதுவும் நடக்­கலாம் என்­ப­தே கடந்த கால கசப்­பான அனு­ப­வங்களிலி­ருந்து நாம் கற்­றுள்ள பாட­மா­கும். இந்தத் தீர்­ப்­பா­னது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் தொட­ரப்­பட்ட வழக்கின் அடிப்­ப­டையில் நீதி­­­மன்றம் வழங்­கி­ய­தாகும். இதில் முஸ்­லிம்­களை சம்­பந்­தப்­ப­டுத்தி அதனை இன­வா­த கண்­ணோட்­டத்தில் சித்­தி­ரிக்க யாருக்கும் இட­ம­ளிக்கக் கூடாது என்­பதை வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.