நளீமியா : பெருமைப்படுவதா? பொறாமைப்படுவதா?

அண்மைக்காலமாக ஜாமிஆ நளீமியா பற்றிய விமர்சனங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தும் சமூகத்துக்கு வெளியிலிருந்தும் முன் வைக்கப்படுவதை யாம் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி கற்றவன் என்ற வகையிலும் அங்கு பணி புரிபவன் என்ற வகையிலும் அந்த நிறுவனம் பற்றிய எனது மனப்பதிவுகளை வெளியிடுவது எனது தார்மீகக் கடமை என்று நினைக்கின்றேன்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான இணைக் குழு தெரிவித்துள்ளது.

ஜுலை 8 முதல் அரபுக் கல்லூரிகளை ஆரம்பிக்க திணைக்களம் அனுமதி

நாட்டில் கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் முகமாக சுமார் 3 மாத காலமாக மூடப்பட்டிருந்த அரபு மத்ரஸாக்களை மீளத்திறப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க மத்ரஸாக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும்  8 ஆம் திகதி திறக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள்

கொவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லட் சுட்டிக்காட்டியுள்ளார்.