உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்ட காத்தான்குடி அதர் பள்ளிவாசலை திறக்க அனுமதி
காத்தான்குடியில் கடந்த நான்கு வருடங்களாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாயல் தொழுகைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குலுக்குப் பின்னர் இலங்கையில் பல தௌஹீத் பள்ளிவாயல்கள் மூடப்பட்டு தடை விதிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கும் செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.