தனது காணியை பார்வையிடச் சென்றவரை தாக்கிய சம்பவம்: கிரான் பிரதேச சபை காணி உத்தியோகத்தர் மயூரன் கைது
தனது காணியை பார்வையிடச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை, தாக்கி மானபங்கப்படுத்தி அதனை காணொலி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரான் பிரதேச சபையின் காணி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் மயூரன் என்பவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குறித்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் என நம்பப்படும் பிரதேசத்தின் சினிமா கொட்டகையொன்றின் உரிமையாளரையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு…