இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் இறுதியிலேயே ஞானசார தேரருக்கு 9 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 1500 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 9 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேனவால்…