தவறான புரிதல்கள் குறித்து உலமா சபையுடன் கலந்துரையாடினேன்

ஐக்­கிய குடி­ய­ரசு முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க நேற்று முன்­தினம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தலை­மை­ய­கத்­திற்கு விஜயம் செய்தார். கட்­சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் அங்­கத்­த­வர்­களும் இச்­சந்­திப்பில் பங்­கு­பற்­றினர்.

காஸா மக்களை வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டம் அநீதியானது

காஸா மக்­களை பல­வந்­த­மாக வேறி­டத்தில் குடி­ய­மர்­த்தும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்பின் திட்­டத்தை உறு­தி­யாக நிரா­க­ரித்த அனைத்து அர­சாங்­கங்­க­ளுக்கும், நிறு­வ­னங்­க­ளுக்கும் தமது நன்­றியை தெரி­வித்துக் கொள்­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.

முதலாவது ஹஜ் குழு மே 13 இல் பயணம்

இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது குழு எதிர்வரும் மே 13ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

புனித ரமழானில் சமூக நலனை முன்னிறுத்துவோம்

நாம் இன்னும் சில தினங்­களில் புனித ரம­ழான் மாதத்தை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும். இம்­மா­தத்­திலேயே அல்லாஹ் அல்­குர்­ஆனை இறக்கி வைத்தான். இம்­மாதம் ஒவ்வோர் அடி­யானும் அல்­லாஹ்­வுடன் நெருக்­க­மான தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அரு­ளப்­பட்­ட­தாகும். இது துஆ­வி­னதும் பொறு­மை­யி­னதும், ஸத­கா­வி­னதும் மாத­மாகும்.