10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல்
நீதிச்சேவை ஆணைக்குழு வெற்றிடமாகவுள்ள 10 காதி பிரதேச பிரிவுகளுக்குத் தகுதியுள்ள புதிய காதி நீதவான்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்பறை),பேருவளை, மாவனல்ல, யாழ்ப்பாணம், கொழும்பு தெற்கு, புத்தளம், காத்தான்குடி, சம்மாந்துறை ஆகிய காதி நீதிவான்கள் பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.