கிரலாகல தூபி புகைப்பட விவகாரம்: மாணவர்களை விடுவிக்குமாறு கோரிய பிணை மனு நிராகரிப்பு

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களின் பிணை மனு நேற்று கெப்பித்திகொல்லாவ நீதிவான் நிதிமன்ற நீதிவானால் நிராகரிக்கப்பட்டது. சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த பிணை மனு கோரிக்கையையே நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹர்ஷன அல்விஸ் நிராகரித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைகக்கழகத்தினைச் சேர்ந்த 8 மாணவர்கள் கடந்த…

கலப்பு தேர்தல் முறை சிறுபான்மைருக்கு பெரும் பாதிப்பு

கலப்பு தேர்தல் முறையின் மூலம் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை உள்ளது. அதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகம் பரந்து வாழ்வதால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம் தெரிவித்தார். புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்து…

ஊடகவியளாலர்களுக்கு  நீதியை நிலைநாட்டுக

"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.  அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்." இவ்வாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8  ஊடக அமைப்புகள் நேற்று  கூட்டாகக் கோரிக்கை விடுத்தன. ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ்…

ஞானசார தேரரின் பணியை தொடர ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும்

நாட்டில் காணப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குரல்கொடுத்து, அவற்றுக்குத் தீர்வுகாணும் நோக்கில் செயற்பட்டுவந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை தொடர்ந்தும் நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டுமென சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…