Author
vidivelli
- 4372 posts
இந்தேனேஷியாவில் சுனாமி : 281 பேர் பலி
இந்தேனேஷியாவில் கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்பொன்றினால் ஏற்பட்ட சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில் இருபுறங்களையும் தாக்கியதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், உணவகங்கள் என்பன அள்ளுண்டு சென்றன. இந்த அனர்த்தத்தினால் குறைந்து 281 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 57 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை, 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. அருகாமையில் அமைந்துள்ள கரகட்டாஉ எரிமலையிலிருந்து கடந்த…
கொழும்பு குப்பை வேண்டாம்! புத்தளத்தில் தொடரும் போராட்டம்
தற்போது குப்பை கொட்டுவதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதேசம் சேரக்குளி ஏரியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ளது. இதனால் புத்தளத்தை பாதுகாக்கும் வேட்கையில் புத்தளம், வனாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் சேரக்குளி மக்கள் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு முஸ்லிம் பெண்களுடைய பங்களிப்பும் பெரும்பலத்தைச் சேர்த்துள்ளது. முஸ்லிம் பெண்களுடைய ஈடுபாடு போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது..
கரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, துயரக் காவியமாக பதியச் செய்த 2004ஆம் ஆண்டின் சுனாமிக் கடற்கோள் பேரனர்த்தத்தின் பெரும் துயர நினைவுகள், அத்துயரை எதிர்கொண்டவர்களினதும் அவற்றை நேரில் கண்டவர்களினதும்…