மூன்று பாக். பிரஜை உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டணை

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர் மற்றும் மூன்று இலங்கையர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளார். மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு சட்டமா அதிபரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும். குற்றவாளிக்கு மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது விடுதலை பெற்றுக் கொள்வதற்கோ வேறு வழிமுறைகள் உள்ளனவா என்பது சட்டமா…

பாகிஸ்தானில் ஆசியா பீவி மதநிந்தனை விவகாரம் மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ பெண்ணொருவரை விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பல நாட்கள் அமைதியின்மையையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு குறித்த பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. இந் நிலையில் அத் தீர்ப்பினை பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் மீளாய்வு செய்யவுள்ளது. மதநிந்தனைக் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளைச் சிறையில் கழித்த ஆசியா பீவி என்ற பெண் கடந்த ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அந்த விடுதலைக்கு எதிரக முன்வைக்கப்பட்ட…

கிண்ணியாவில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது கட,ற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிண்ணியா பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சமயம், அதிலிருந்து தப்பிக்க முற்பட்ட இருவர் ஆற்றில் பாய்ந்து மூழ்கி காணாமல் போன நிலையில் நேற்று மாலை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த  22 வயதான றபீக் பாரிஸ் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆற்றில் பாய்ந்த மற்றொரு இளைஞரான 19 வயதான பஸீது றமீஸின் சடலத்தை தேடும் பணி நேற்றிரவு வரை தொடர்ந்தது.

போதைப் பொருள் கடத்தல், பாவனையும் கொலைகளும் தொடர்தல் நாட்டுக்கு கெடுதி

விடை­பெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்­கையில் பெருந்­தொ­கை­யான போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக வர­லாறு படைத்­துள்­ளது. அதே போன்றே படு­கொ­லைகள், தற்­கொ­லைகள் பெரு­ம­ளவில் இடம்­பெற்ற ஆண்­டா­கவும் பொலிஸ் பதி­வுகள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. சுமார் அரை நூற்­றாண்­டுக்கு முன்னர் இலங்­கையில் திடீர் மர­ணங்கள், விபத்து மர­ணங்கள் என்­பன மிகவும் அபூர்வ நிகழ்­வு­க­ளா­கவே நோக்­கப்­பட்டு வந்­தன. வயோ­திப மரணம், ஒரு சில நோய்­களால் ஏற்­படும் மரணம், விஷ ஜந்­துக்கள் தீண்­டலால் நிகழும் மரணம் அல்­லது நாய்க்­கடி மரணம் என்றே…