ஞானசார தேரருக்கு விடுதலையளிக்குக

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞானசாரதேரருக்கு…

யெமன் தாய்மார்கள் தமது மகன்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அமீரக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தமது மகன்மார்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரி யெமனிலுள்ள தாய்மார்கள் நாட்டின் உள்துறை அமைச்சரின் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது அல்லது காணமலாக்கப்படுதலுக்கு எதிராகப் போராடும் யெமன் பெண்கள் அமைப்பான கடத்தப்பட்டோரின் தாய்மார்களின் அமைப்பு தமது பிள்ளைகளின் நிலைமை தொடர்பில் அறியத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல் போயுள்ளோரில் சிலரின் தகவல்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை. தடுத்து…

ஹஜ் விவகாரத்துக்கான சட்ட வரைபு பூர்த்தி

ஹஜ் விவகாரங்களை ஹஜ் சட்டம் ஒன்றின் கீழ் முன்னெடுப்பதற்கு அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டுவந்த ஹஜ் சட்டவரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஹஜ் சட்ட வரைபு தற்போது அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் எஸ். மரீனா மொஹம்மடிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார். ஹஜ் சட்ட மூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு தெரிவித்தார். அவர்…

சவூதி கோடீஸ்வரர் அல் -அமௌதி தடுப்புக்காவலில் இருந்து விடுதலை

சவூதி அரேபியாவின் சர்ச்சைக்குரிய ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எத்தியோப்பியாவில் பிறந்த சவூதி கோடீஸ்வரரான மொஹமட் அல்-அமௌதி விடுவிக்கப்பட்டுள்ளார். எத்தியோப்பிய பிரதமர் அபியி அஹ்மெட் தனது டுவிட்டரில் கடந்த சனிக்கிழமை அமௌதி விடுவிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் தான் றியாதிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானிடம் இது தொடர்பில் தெரிவித்ததாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜித்தாவின் மேற்கு நகரில்…