இஸ்ரேலுக்கு எதிராக உலகெங்கும் வீதிக்கு இறங்கிய மாணவர்கள்

0 150

ஏ.ஆர்.ஏ.பரீல்

ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் காஸா மீது மனி­தா­பி­மானமற்ற வகையில் கடந்த 6 மாதங்­க­ளுக்கும் மேலாக போர் தொடுத்து அப்­பாவி பலஸ்­தீ­னர்­களை கொடு­மை­யாக கொலை செய்து வரும் நிலையில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக உலக நாடு­களில் எதிர்ப்புப் போராட்­டங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இஸ்­ரேலின் படு­கொ­லை­க­ளுக்கு எதி­ராக உல­க­நா­டு­களில் மாத்­தி­ர­மல்ல இஸ்­ரே­லிலும் போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யா­கு­வுக்கு எதி­ரா­கவும், அவ­ரது அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­க­வு­மான போராட்­டங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

ஐ.நா.வின் பாது­காப்பு சபையில் இஸ்­ரே­லுக்கு எதி­ரான தீர்­மா­னங்­களின் போது அமெ­ரிக்கா தனது வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி இஸ்­ரேலை காப்­பாற்றி வந்­தாலும் அங்கும் பலஸ்­தீன இன­ப்ப­டு­கொ­லை­களை அந்­நாட்டு மக்கள் எதிர்த்து வரு­கின்­றனர்.

அமெ­ரிக்­காவின் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாண­வர்கள் இஸ்­ரேலின் காஸா­வுக்கு எதி­ரான யுத்­தத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக மைதா­னத்தை ஆக்­கி­ர­மித்து எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கங்­களும் பொலி­ஸாரும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­படும் மாண­வர்­களை அப்­பு­றப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

நியுயோர்க் – கொலம்­பிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட இஸ்­ரே­லுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம் அமெ­ரிக்­கா­வுக்கு வெளி­யிலும் பர­வி­யுள்­ளது. நாடு தழு­விய ரீதியில் இடம்­பெறும் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்ளோர் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இஸ்­ரே­லு­ட­னான நிதி தொடர்­பு­களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்­ளன.

காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்­துள்ள யுத்தம் கார­ண­மாக கடந்த சுமார் 7 மாத காலத்தில் சுமார் 34,388 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 77, 343 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். அங்­க­வீ­னர்­க­ளா­கவும் மாறி­யுள்­ளனர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டுவோர் மீது பல்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்கள் சட்­டத்­தையும் ஒழுங்­கி­னையும் நிலை நாட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற் கொண்­ட­த­னை­ய­டுத்து நூற்­றுக்­க­ணக்­கான பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

பல்­க­லைக்­க­ழக அதி­கா­ரிகள் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளனர். பட்­ட­ம­ளிப்பு விழா அடுத்த மாதம் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில் மாண­வர்­களின் குறிப்­பிட்ட ஆர்ப்­பாட்­டத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்­காக பல்­வேறு முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை லொஸ் ஏன்­ஜல்­ஸி­லுள்ள கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் பலஸ்தீன் ஆத­ரவு மாண­வர்­களின் முகாம் அண்மை நாட்­க­ளாக பரந்­து­பட்­டுள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் நிலைமை மோச­மா­கி­யது. பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு பிரி­வி­னரை வேறு­ப­டுத்­து­வ­தற்­காக போடப்­பட்­டி­ருந்த தடுப்­பினை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அகற்­றி­ய­த­னாலே இந்­நி­லைமை உரு­வா­கி­ய­தாக கல்­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் மேரி ஒசாகா தெரி­வித்­துள்ளார்.

இரு பிரி­வி­னரும் ஒரு­வரை ஒருவர் தள்ளி முரண்­பட்டுக் கொண்­ட­துடன் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தவ­றான சுலோ­கங்­க­ளையும் உச்­ச­ரித்துக் கொண்­டனர். பல்­க­லைக்­க­ழக பொலிஸார் தடி­யடி பிர­யோகம் மேற்­கொண்டு இரு தரப்­பி­ன­ரையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர். இந்தக் கல­வ­ரத்­தி­னை­ய­டுத்து பல்­க­லைக்­க­ழ­கத்தில் மேல­திக பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இப்­பல்­க­லைக்­க­ழக அசம்­பா­வித நிகழ்­வு­களின் போது லொஸ் ஏன்ஜல்ஸ் பொலிஸார் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அழைக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு கைது­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக பல்­க­லைக்­க­ழக பொலிஸார் இர­சா­யன கண்ணீர் புகையை உப­யோ­கித்­தனர்.

பொஸ்­டனில் வட கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தை களை­வ­தற்­காக பொலிஸார் 100 மாண­வர்­களை கைது செய்து ஆர்ப்­பாட்ட முகாமை அகற்­றி­னார்கள். இந்த பல்­க­லைக்­க­ழக ஆர்ப்­பாட்­டத்தில் ‘யூதர்­களை கொலை செய்­யவும்’ எனும் சுலோ­கங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக பல்­க­லைக்­க­ழகம் தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் பலஸ்தீன் ஆத­ரவு பல்­க­லைக்­க­ழக ஆர்ப்­பாட்ட குழு இதனை மறுத்­துள்­ளது. இவ்­வாறு சுலோ­கங்கள் உச்­ச­ரிக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை புளூமிங்ஹாம் இந்­தி­யான பல்­க­லைக்­க­ழக பொலிஸார் அப்­பல்­க­லைக்­க­ழக ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­வ­தற்­காக ஆர்ப்­பாட்ட முகா­மி­லி­ருந்த 23 பேரைக் கைது செய்­த­தாக இந்­தி­யானா மாணவர் பத்­தி­ரிகை நாளிதழ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அத்­தோடு அரி­சோனா அரச பல்­க­லைக்­க­ழக பொலிஸ் பிரிவு சட்­ட­வி­ரோத ஆர்ப்­பாட்ட முகாமை நடாத்­தி­ய­தாக 69 பேரைக் கைது செய்­துள்­ளது. இந்த முகா­மி­லி­ருந்­த­வர்­களில் அதி­க­மானோர் அரி­சோனா அரச பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களோ அல்­லது பல்­க­லைக்­க­ழக பணி­யா­ளர்­களோ அல்ல என பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்ட முகாமை நிறு­வி­ய­தா­கவும் நிர்­வா­கத்தின் உத்­த­ர­வுகள் மீறப்­பட்­ட­தா­கவும் அவர்கள் கலைந்து செல்­ல­வில்லை எனவும் அத­னாலேயே கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
அத்­தோடு சென் லூயி­ஸி­லுள்ள வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் 80 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி வேட்­பாளர் ஜில் ஸ்டின் மற்றும் அவ­ரது பிர­சார முகா­மை­யா­ளரும் அடங்­குவர்.

அமெ­ரிக்­கா­வெங்கும் பல்­க­லைக்­க­ழக தலை­வர்கள் ஆர்ப்­பாட்­டங்­களை தடுப்­ப­தற்கு முயற்­சித்தும் அது பல­ன­ளிக்­க­வில்லை. பொலிஸார் அடா­வ­டித்­த­ன­மாக தலை­யிட்டு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்­களைக் கைது செய்­தனர். அத்­தோடு பீடங்­களின் உறுப்­பி­னர்­க­ளையும் பல­வந்­த­மாக கைது செய்­தார்கள்.
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் பீடங்­களின் உறுப்­பி­னர்­க­ளது விடு­த­லைக்கு குரல் கொடுத்­தனர். ஒரு வாரத்­துக்கு முன்பு நிவ்­யோர்க்கில் 100க்கும் மேற்­பட்ட பலஸ்­தீன ஆத­ர­வா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

கடந்த 10 தினங்­களில் நூற்­றுக்கும் மேற்­பட்ட பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டனர். பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டனர். சிலர் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டனர். யாழ் பல்­க­லைக்­க­ழகம், தெற்கு கல்­போர்­னியா பல்­க­லைக்­க­ழகம், வன்­டர்பில்ட் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் மின்னஸ் ஒடா பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இந்­ந­ட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

சில பல்­க­லைக்­க­ழ­கங்கள் தங்­க­ளது பட்­ட­ம­ளிப்பு விழாக்களை இரத்துச் செய்தன. ‘‘மாணவர்கள் பெரும் சவாலை பொறுப்பேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அவர்கள் பல்கலைக்கழக சட்டவிதிகளை மீறியதாக காரணம் காட்டி வெளியேற்றப்படலாம். நியூஜேர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களின் டியுசன் கொடுப்பனவு வருடத்துக்கு சுமார் 50 ஆயிரம் டொலர்களாகும்’’ என அல்ஜஸீராவைச் சேர்ந்த ஜோன் ஹென்ட்ரன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் கோர்னல் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான மொமோடு டால் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் ஒரு முகாமை அமைத்ததற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

‘எங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை. இங்கு முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்பு சவாலாக உள்ளது. அதாவது அரபு மாணவர்கள், பலஸ்தீன மாணவர்கள் மற்றும் பலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவானவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நிர்வாகத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை எனவும் மொமோடு டால் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.