போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை

சட்ட விரோத போதைப்­பொருள் கடத்­த­லுக்கு எதி­ராக கடந்த நான்கு வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் இவ்­வாரம் முதல் புதிய உத்­வே­கத்­துடன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றும் போதைப்­பொருள் கடத்­தற்­கா­ரர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஒரு­போதும் பின்­வாங்கப் போவ­தில்லை என்றும்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நேற்று முற்­பகல் முல்­லைத்­தீவு முள்­ளி­ய­வளை வித்­தி­யா­னந்த மகா வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வாரத்தை…

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்

எஸ்.றிபான் புதிய அரசியலமைப்புப் பற்றிய கதைகள் மீண்டும் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று பேச்சுக்களும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளன. இலங்கையை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதனை ஏற்றுக் கொண்ட போதிலும் அதனை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய அரசியல் தீர்வுகளை முன்வைப்பதற்கு முன்வரவில்லை. காலத்தை…

திசை திருப்பப்படும் அரசியலமைப்பு முயற்சிகள்

நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறுகின்ற போதிலும் அதனைச் சாத்தியமாக்க முடியாத துரதிஷ்ட நிலையே தொடர்கிறது. இதற்கிடையில் இந்த முயற்சிகள் தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் மூலம் திசை திருப்புவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. எமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

மட்டக்களப்பில் சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்

அண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை சீர்குலைக்கும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.இவர்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சமாதான பேரவையின் தலைவர் யூ.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, அண்மையில் களுவங்கேணி பாடசாலை மாணவி ஒருவர் பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்…