ஓர் ஏழை போல வௌ்ளை மாளி­கைக்குள் இருக்­கிறேன்

அமெ­ரிக்க – மெக்­ஸிக்கோ எல்­லையின் பாது­காப்பு கருதி சுவர் எழுப்ப வேண்டும் எனவும், அதற்­காக 500 கோடி டொலர் நிதி ஒதுக்க வேண்­டு­மெனவும் ஜனா­தி­பதி ட்ரம்ப் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்தக் கோரிக்­கைக்கு அமெ­ரிக்க எதிர்க்­கட்­சி­யான ஜன­நா­யகக் கட்சி தொடர்ந்தும் மறுத்­து­வ­ரு­கி­றது. மேலும் அமெ­ரிக்க அரசின் செல­வின நிதி மசோ­தாவை செனட்டில் நிறை­வேற்ற எதிர்க்­கட்சி முன்­வ­ர­வில்லை. இதனால் தொடர்ந்து 3 ஆவது நாளாக அமெ­ரிக்க அரசு நிர்­வாகம் முடங்­கி­யுள்­ளது. அத்­தோடு அர­சாங்க ஊழி­யர்கள் ஊதி­ய­மின்றிப் பணி­யாற்ற வேண்­டிய நிலை…

பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல் நீங்க நீங்க வேண்டும்

உலகளாவிய ரீதியில் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டில் முன்னெப்போதுமில்லாதவாறு  அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக இரு பிரதான சர்வதேச ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. ''உலகின் சில பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள்; சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதுமில்லாத வகையில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள்'' என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டில் ஊடகவியலாளர்கள் மீதான கொலைகளும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படுவதும், ஆளையே…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி: சம்பந்தன், மஹிந்த பொருத்தமற்றவர்கள் தமக்கு தருமாறு கோருகிறது ஜே.வி.பி.

பிரதான எதிர்க்கட்சிப் பதவிக்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பும், மஹிந்த ராஜபக்ஷவும் மோதிக்கொண்டு தமது கடமையை கைவிட்டுவிடுகின்றனர். ஆனால் நாம் இன்றும் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்துப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம் என ஜே.வி.பி தெரிவித்தது. நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று இந்த நாட்டில் பொறுப்புக்…

உத்தர பிரதேஷில் பொது இடங்களில் தொழுகை நடத்த அதிரடித் தடை

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. டெல்லி அருகே உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டாவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள தொழில் பூங்காக்களில் ஐ.டி. நிறுவனங்கள், கணினி மென்பொருள், இலத்திரனியல், மொபைல் போன் தயாரிப்பு என பல்துறை சார்ந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றுள் பலவும் பன்னாட்டு நிறுவனங்களாகும். வெள்ளிக்கிழமைகளில் நிறுவனங்களின் ஆலைகளில் போதிய இடவசதி இல்லாததால் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழில்…