நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து நீக்­குங்கள் என்­கிறார் சபா­நா­யகர்.

0 784
  • பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள்

நான் குற்றம் செய்­தி­ருந்தால்  நீதி, நியா­யத்­துக்­காக ‘ஜம்பர்’ அணி­வ­தற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றேன். என்­மீது நம்­பிக்கை இல்­லை­யென்றால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்து என்னை நீக்­குங்கள். நான் பதவி வில­கவும் தயா­ரா­கவே உள்ளேன் என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை அமர்­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர், சபா­நா­யகர் மீதான விமர்­சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்­யாக எழு­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் சபா­நா­யகர் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் ஆளும் தரப்பு குற்றம் சுமத்தும் கருத்­துக்கள் குறித்து கேள்வி எழுப்­பினர். இதற்கு பதில் அளிக்கும் போதே சபா­நா­யகர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான மரிக்கார், ‘’சபா­நா­ய­கரின் சான்­று­டன் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஹன்சார்ட் அறிக்­கையில்  சில வச­னங்கள் புதி­தாக இணைக்­கப்­பட்­டுள்­ள­துடன், ஒரு­சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. போலி ஆவ­ண­மொன்றை தயா­ரித்தால் குற்­ற­வியல் சட்­டத்­தின்­பி­ர­காரம் மூன்­றாண்­டுகள் சிறை­தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டி­வரும். ஒரு­த­ரப்­புக்கு சார்­பான வகையில் பதவி நிலையை பயன்­ப­டுத்­து­வதும்  இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்­டத்தின் கீழ் 10 ஆண்­டுகள் வரையில்  சிறை­தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டிய குற்­ற­மாகும். ஆகவே சபா­நா­யகர் ஜம்பர் அணி­வ­தற்கு தயா­ரா­க­வேண்டும்’’ என உதய கம்­மன்­பில எம்..பி. கொழும்பில் நேற்று (நேற்று முன்­தினம்) நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யிட்­டுள்ளார். அவரின் இந்த கூற்று உண்­மையா? சபா­நா­யகர் போலி ஆவ­ணத்தை தயா­ரித்­தாரா? இது தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு உண்மை தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். ஆகவே, விசா­ர­ணையை ஆரம்­பிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் என்று குறிப்­பிட்டார்,

இதற்கு பதி­ல­ளித்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய,

நான் குற்­ற­மி­ழைக்­க­வில்லை. நீதி, நியா­யத்­துக்­காக ஜம்பர் அணி­ய­வேண்­டிய தேவை ஏற்­படின் அதை செய்­வ­தற்கு நான் தயார். என் வாழ்க்­கையில் என்­றுமே நான் மோச­டி­யான செயலில் ஈடு­பட்­ட­தில்லை. விசா­ரணை நடத்­தப்­பட்­டாலும், எந்­த­வொரு விசா­ர­ணைக்கும் முகங்­கொ­டுக்க நான் தயார். சபா­நா­யகர் பத­விக்கு நான் தகு­தி­யற்­றவன் என்றால் எனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து நீக்­குங்கள். அதில் எந்தப் பிரச்­சி­னையும் கிடை­யாது   போலி ஆவணம் தயா­ரித்­துள்­ள­தாக சிலர் குற்றம் சுமத்­து­கின்­றனர். அதனை என்னால் ஏற்­று­கொள்ள முடி­யாது. ஹன்சார்ட் அறிக்கை அவ்­வாறு பொய்­யாக தயா­ரிக்­கப்­ப­டாது. பாரா­ளு­மன்ற செய­லாளர் மற்றும் அதி­கா­ரிகள் மீது எனக்கு முழு­மை­யான நம்­பிக்கை உள்­ளது. அவர்கள் தவ­றான வகையில் செயற்­பட மாட்­டார்கள். அவ்­வாறு அவர்கள் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் ஊட­கங்கள் முன்­னி­லையில் பொய்­களை கூறாது சாட்­சி­யங்­க­ளுடன் கூறுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.

மேலும் எனது உருவத்தை வைத்து கொடும்பாவி எரிப்பதை நான் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. அவ்வாறு எரிப்பது என் மீதான தீய பார்வைகள், தீட்டுக்கள் என்னை விட்டு விலகிவிடும் ஆகவே அதனை பற்றி நான் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.