பாரா­ளு­மன்­றத்தில் இன்று இடைக்­கால கணக்­க­றிக்கை

அடுத்­தாண்டின் முதல் நான்கு மாத­கா­லத்­திற்­கான வரவு செல­வுத்­திட்ட இடைக்­கால கணக்­க­றிக்­கையை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இடைக்­கால கணக்­க­றிக்கை மீதான வாக்­கெ­டுப்பும் நடத்­த­ப்ப­ட­வுள்­ளது. அடுத்த ஆண்­டுக்­கான வரவு  -செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிக்க  தேசிய அர­சாங்­கத்தின் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்த நிலையில் கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனா­தி­பதி முன்­னெ­டுத்த அர­சியல் மாற்­றங்­க­ளை­ய­டுத்து  தேசிய அர­சாங்கம் கலைக்­கப்­பட்டு…

எதிர்க்­கட்சித் தலைவர் குறித்த அறி­விப்பு இன்று

சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் எதிர்க்­கட்சித் தலைவர் குறித்த இறுதி தீர்மானத்தை சபா­நா­யகர் இன்று அறி­விப்­பா­ரெனத் தெரிவிக்கப்படுகின்­றது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  புதிய எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஆளும் எதிர்க்­கட்­சி­க­ளி­டையில் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­ய­வர்கள் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாத அர­சியல் கட்­சியில் அங்­கத்­து­வத்தை பெற்­றுக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரு­கை­தர முடி­யாது, ஆகவே, அவர்­களின்…

புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­டது

ஒக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் ஸ்தாபிக்­கப்பட்ட அர­சாங்கம் நீதி­மன்ற தீர்ப்­பை­ய­டுத்து வலு­வி­ழந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று நியமனம் பெற்றனர். நேற்­றுக்­காலை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன  முன்­னி­லையில் இவர்கள் சத்­தியப் பிர­மாணம்  செய்து கொண்­டனர். இதன்­போது  பாது­காப்பு, சட்­டம்–­ஒழுங்கு, மாகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு எவ­ருக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை. குறித்த அமைச்­சுகள்…

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.!

இஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும்  குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள், தொண்டர் நிறுவனங்கள்   என தனித்துவமான அமைப்புக்களும் காணப்படுகின்றன.