காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

0 132

காஸாவில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு (Children of Gaza Fund) பங்­க­ளிப்புச் செய்­வ­தற்­கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு இந்த நிதி­யத்­திற்குப் பங்­க­ளிப்­பு­களை அளிப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட கால அவ­காசம் கடந்த 2024 ஏப்ரல் 30 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்­தது. எனினும், நாட­ளா­விய ரீதியில் பொது­மக்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­யின்­படி, 2024 மே 31 வரை காலத்தை நீ­டிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

“காசா சிறுவர் நிதி­யத்­திற்கு” பங்­க­ளிக்­கு­மாறு ஜனா­தி­பதி அலு­வ­லகம் கேட்டுக் கொண்­ட­தற்­கி­ணங்க, நாட­ளா­விய ரீதியில் உள்ள பொது மக்கள் இன, மத பேத­மின்றி அத­னுடன் கைகோர்த்­தனர்.

இம்­முறை நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்­வு­க­ளுக்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்கள் ஒதுக்­கப்­பட்ட நிதியை இந்த நிதி­யத்­திற்கு வழங்­கி­ய­தோடு இதன் முதற்­கட்­ட­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் உத்­தி­யோ­க­பூர்வ முக­வ­ர­கத்தின் ஊடாக ஜனா­தி­பதி ரணில் விக்­­ர­ம­சிங்க அண்­மையில் பலஸ்­தீன அர­சாங்­கத்­திடம் ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைக் கைய­ளித்­தி­ருந்தார்.

நன்­கொ­டை­யா­ளர்­க­ளுக்கு 2024 மே 31 வரை தொடர்ந்து பங்­க­ளிக்க வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தோடு பங்­க­ளிக்க விரும்பும் நன்­கொ­டை­யா­ளர்­க­ளாக இருந்தால், அந்த நன்­கொ­டை­களை ‘இலங்கை வங்கி தப்­ரபேன் கிளையில் (747) 7040016’ எனும் வங்கிக் கணக்கில் அன்­ப­ளிப்புத் தொகையை வைப்பு செய்ய முடியும். அதன்­பின்னர் பற்­றுச்­சீட்டை 077-9730396 என்ற எண்­ணுக்கு WhatsApp ஊடாக அனுப்­பு­மாறு ஜனா­தி­பதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையில், காஸா பகு­தியில் வாழும் குழந்­தை­க­ளுக்குத் தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக இலங்கை அண்­மையில் வழங்­கிய நிதி­யு­த­விக்கு ஐக்­கிய நாடுகள் சபையின் நிவா­ரண மற்றும் பணி தொடர்­பான முகவர் அமைப்பின் (UNRWA) ஆணை­யாளர் நாயகம் பிலிபே லெஸ­ரினி (Philippe Lazzarini), ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எழு­திய கடி­தத்தில் தனது பாராட்­டுக்­களைத் தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடு­களின் நிவா­ரணம் மற்றும் பணி தொடர்­பான முகவர் அமைப்­பினால் முன்­வைக்­கப்­பட்ட அவ­சர கோரிக்­கைக்கு இலங்­கையின் பங்­க­ளிப்பு ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி தொடர்­பான முகவர் அமைப்பின் பரா­ம­ரிப்பில் உள்ள ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்­களின் அத்­தி­யா­வ­சிய மனி­தா­பி­மானத் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­கான முயற்­சி­களை மேலும் வலுப்­ப­டுத்தும் என்றும் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் நிவா­ரணம் மற்றும் பணி தொடர்­பான முகவர் அமைப்­பினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் நிவா­ரணத் திட்­டங்­க­ளுக்கு நிதி வழங்­கு­வதில் உள்ள சிக்கல் நிலை குறித்து மேலும் குறிப்­பிட்ட லெஸ­ரினி, அந்தத் திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­து­வதில் பங்­கு­தா­ரர்­களின் பங்­க­ளிப்பு முக்­கியப் பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனிலுள்ள அகதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் தொடர்பான முகவர் அமைப்பு ஆகியவற்றிற்கு இலங்கை வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த லெஸரினி, எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.