பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பேருவளை மாணவனின் ஜனாஸா நல்லடக்கம்

0 795

 

  • பேரு­வளை நிருபர்

பேரு­வளை சீனன்­கோட்டை அல் ஹுமை­ஸரா தேசிய பாட­சா­லையில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் மர­ண­மான முஹம்மத் தாரிகின் ஜனாஸா நேற்­று­மாலை சீனன்­கோட்டை பாஸிய்யா பெரிய பள்­ளி­வாசல் மைய­வா­டியில் பெரும் திர­ளான மக்களின் பங்­கு­பற்­று­த­லுடன் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

பேரு­வ­ளை­ஹேன பகு­தி­யி­லுள்ள வீட்­டி­லி­ருந்து எடுத்துச் செல்­லப்­பட்ட ஜனா­ஸா­வுக்­காக சீனன்­கோட்டை பாஸிய்யா பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடை­பெற்­றது. மாண­வனின் சகோ­தரன் முஹம்மத் தமீம் ஜனாஸா தொழு­கையை நடாத்த பெரு­க­மலை ஸாக்­கிரீன் பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மௌலவி எஸ்.எச்.எம் இம்ரான் ரஹ்­மானி துஆ பிரார்த்­தனை புரிந்தார். அஷ்ஷெய்க் பஹ்ரி அனஸ் (நளீமி) விஷேட அனு­தாபச் சொற்­பொ­ழிவு நிகழ்த்­தினார்.

சடலம் பிரேத பரி­சோ­தனை செய்­யப்­பட்டு மாண­வனின் இல்­லத்­திற்கு எடுத்து வரப்­பட்­ட­போது ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஜனா­ஸாவில் கலந்­து­கொள்ளத் திரண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. மத­கு­ரு­மார்கள், அர­சி­யல்­வா­திகள், பாட­சாலை மாண­வர்கள், சிறு­வர்கள் மற்றும் பெண்கள் எனப் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் பங்­கு­பற்­றினர்.

அதே சமயம் மேற்­படி பாட­சாலை நேற்­றைய தினம் மூடப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.