அமர்வுகளை புறக்கணித்த ஆளும் தரப்பு எம்.பி.க்கள்

0 677
  • ஆர்.யசி
  • எம்.ஆர்.எம்.வசீம்

ஆளும் கட்­சி­யாக ஜனா­தி­ப­தியால் கூறப்­படும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் நேற்­றைய தினமும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை புறக்­க­ணித்­தனர்.

அத்­துடன், நவம்பர் மாதம்  14ஆம் திகதி  தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் நடை­பெற்ற சபை  அமர்­வுகள்  அர­சி­ய­ல­மைப்பு மற்றும்  பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளைக்கு அமைய இடம்­பெ­ற­வில்­லை­யென ஆளும் கட்­சி­யினர் கூறி­யுள்­ள­துடன், அன்­றைய தினங்­களின் பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் அறிக்­கை­யினை நீக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்­ளனர்.

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு வெற்­றி­கொள்­ளப்­பட்ட பின்னர் கடந்த 14 ஆம் திகதி அர­சாங்கம் பெரும்­பான்மை இழந்­த­தாக சபா­நா­யகர் அறி­வித்­தி­ருந்தார். அத­னை­ய­டுத்து கடந்த 14, 15, 16, 19, 21, மற்றும் 23 ஆம் திக­தி­களில் ஆளும் கட்­சி­யினர் தொடர்ச்­சி­யாக சபையில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் சபா­நா­ய­க­ரது அறி­விப்­பையோ அல்­லது அவ­ரையோ ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்று கூறி சபை­யி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­தனர்.

இந்­நி­லையில் நேற்றும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் ஆளும் கட்­சி­யினர் பங்­கேற்­க­வில்லை. நேற்று பகல் 1 மணிக்கு சபை கூடி­ய­போது சபையில் எதிர்க்­கட்சி ஆச­னங்கள் மட்­டுமே நிரம்­பி­யி­ருந்­தன. ஆளும் கட்­சியின் ஆச­னங்கள் வெற்­றி­ட­மா­கவே காணப்­பட்­டன. இந்­நி­லையில் நேற்று காலை பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் கூடிய நிலையில் தாம் பார­ளு­மன்ற அமர்­வு­களில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்ற தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தனர்,

அதேபோல் கடந்த 14,15,16,19,21,23 ஆம் திக­தி­களில் சபை அமர்­வுகள் அர­சி­ய­ல­மைப்­புக்கும், பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளைக்கும் முர­ணான வகையில் கூடி­ய­தா­கவும், ஆகவே அன்­றைய தினம் நிகழ்த்­தப்­பட்ட சகல உரை­களும், தீர்­மா­னங்­களும் ஹன்சார்ட் அறிக்­கை­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டு­மென ஆளும் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, எஸ்.பி. திசாநாயக, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்லஸ் தேவானந்தா, சமல் ராஜபக் ஷ, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கையொப்பமிட்டு  கடிதமொன்றினை சபாநாயகருக்கு வழங்கியிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.