யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?
ஹஜ் யாத்திரிகர்கள் கட்டாயமாக ஏற்றிக்கொள்ளவேண்டிய நோய்த்தடுப்பூசி மருந்து இலங்கையில் இருப்பில் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நோய்த்தடுப்பூசி மருந்து அதற்கான விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டபோது சில வைத்திய நிலையங்கள் ஊடாக ஹஜ் யாத்திரிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் ஹரித அளுத்கே குற்றம் சுமத்தி உள்ளார்.