இஸ்ரேல் – காஸா யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என்கிறது அமெரிக்கா

0 156

ஏ.ஆர்.ஏ.பரீல்

2023 ஆம் ஆண்டு அக்­டோபர் 7ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸா­வுக்கு இடை­யி­லான யுத்தம் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை போர் நிறுத்த ஒப்­பந்­த­மொன்றின் கீழ் நிறுத்­தத்­துக்கு உள்­ளா­கு­மென தான் எதிர்­பார்ப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் தெரி­வித்­துள்ளார்.

இஸ்ரேல் – காஸா யுத்தம் தொடர்பில் தற்­போது கட்­டாரில் இடம்­பெற்­று­வரும் பேச்­சு­வார்த்­தையில் சில முன்­னேற்­றங்கள் எட்­டப்­பட்­டுள்ள நிலையில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் குறிப்­பிட்ட கருத்து வெளி­யா­கி­யுள்­ளது.

கட்­டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிர­தி­நி­திகள் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
நாம் போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை நெருங்­கி­யுள்­ள­தாக எனது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் என்­னிடம் தெரி­வித்தார் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த வருடம் அக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போரா­ளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் பிர­வே­சித்து 1200 இஸ்­ரே­லி­யர்­களைக் கொன்­ற­துடன் 253 பேரை பணயக் கைதி­க­ளாக சிறை­பி­டித்­தனர். இவர்­களில் ஒரு தொகு­தி­யினர் பின்பு விடு­விக்­கப்­பட்­டனர். அன்று முதல் இஸ்ரேல், காஸா மீது வான் மற்றும் தரை வழி தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

இது­வரை இஸ்ரேல் 29782 பலஸ்­தீ­னர்­களைக் கொலை செய்­துள்­ள­தா­கவும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாத்­திரம் 90 பேர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹமாஸின் சுகா­தார அமைச்சு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் நியுயோர்க் நகரில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மத்­தியில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் தொடர்­பிலும் குறிப்­பிட்டார்.

‘நாங்கள் போர் நிறுத்த இலக்கை நெருங்­கி­விட்டோம். இது­வரை உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை என்­றாலும் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை போர் நிறுத்தம் சாத்­தி­ய­மாகும் என அவர் தெரி­வித்­துள்ளார்.

பேச்­சு­வார்த்­தை­களில் முன்­னேற்றம் காணப்­ப­டு­கி­றது. இஸ்­ரே­லிய பணயக் கைதிகள் விடு­தலை தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது. என்­றாலும் இது விட­யத்தில் ஹமாஸ் தீர்­மா­னத்­துக்கு வருமா என்­பதில் சந்­தே­க­முள்­ளது என அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
இதே­வேளை நாங்கள் எகிப்து, இஸ்ரேல், ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடு­க­ளுடன் மேற்­கொண்ட தொடர்­பு­களில் முன்­னேற்றம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் பேச்­சாளர் மத்­தியு மில்லர் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் ஐ.நா.வின் பாது­காப்பு சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட உட­னடி போர் நிறுத்த தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா தனது வீட்டோ அதி­கா­ரத்தின் மூலம் தோற்­க­டித்­தமை பர­வ­லாக விமர்­சிக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட உட­னடி போர் நிறுத்த தீர்­மானம் இஸ்ரேல் தென் காஸா நக­ரான ரஃபா மீது போர் தொடுப்­ப­தையும் கண்­டித்­தி­ருந்­தது. காஸா மீது புதி­தாக தரை­வழித் தாக்­கு­தல்­களை மேற்­கொள்ளும் வகையில் காஸாவின் ஒரு பிராந்­தி­யத்­தி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­று­வ­தற்­கான திட்­ட­மொன்­றினை இரா­ணுவம் கைய­ளித்­துள்­ள­தாக இஸ்ரேல் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை பலஸ்தீன் அதி­கார சபை (PA) யின் பிர­தமர் மொஹமட் ஷ்டய்யே (Mohamed Shtayyeh) தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். அவர் கடந்த திங்­கட்­கி­ழமை பலஸ்தீன் தலைவர் மஹ்மூத் அப்­பா­ஸிடம் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை கைய­ளித்­துள்ளார்.

மேற்­குக்­கரை மற்றும் ஜெரூ­சலம் ஆகிய பகு­தி­களில் முன்­எப்­போதும் இல்­லாத வகையில் தீவி­ர­ம­டைந்து வரும் வன்­மு­றைகள் மற்றும் போர், இனப்­ப­டு­கொலை, காஸா பகு­தியில் தீவி­ர­ம­டைந்து வரும் பட்­டினி ஆகி­ய­வற்றைக் கருத்திற் கொண்டு தான் இரா­ஜி­னாமா செய்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
போரைத் தொடர்ந்து ஒரு பலஸ்­தீன அரசை ஆளக்­கூ­டிய அர­சியல் கட்­ட­மைப்­பிற்­கான வேலையைத் தொடங்­கு­மாறு மஹ்மூத் அப்பாஸ் மீது அமெ­ரிக்க அழுத்தம் அதி­க­ரித்து வரும் நிலையில் பலஸ்தீன் பிர­தமர் தனது இரா­ஜி­னா­மாவை அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பலஸ்­தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். இந்நிலைமை நிபுணர்களைக் கொண்ட ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்கு மஹ்மூத் அப்பாஸுக்கு வாய்ப்பளிக்கும்.

மஹ்மூத் அப்பாஸ் அமெ­ரிக்­காவின் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ளார். அமெ­ரிக்கா பலஸ்தீன் அதி­கார சபை (PA) யில் மாற்­றங்­களை மேற்­கொள்­ளு­மாறும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் காஸா­வையும் பலஸ்தீன் அதி­கார சபையின் ஆட்­சிக்­குட்­ப­டுத்தும் படியும் கோரி வருகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.