சபைக்கு செல்வதற்கு பதிலாக டுபாய்க்கு செல்லும் ரஹீம் எம்.பி
நாட்டிற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும், சட்டங்களில் காலத்துக்கேற்ற திருத்தங்களைச் செய்வதற்கும் அதிகாரமுள்ள சபை பாராளுமன்றமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றுபவர்கள், சட்டங்களைத் திருத்துபவர்கள் இவ்வாறான உயரிய பணிகளுக்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்களில் இன்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்களும் கூட இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.