கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் எழுந்துள்ள நிர்வாக சர்ச்சை

0 132

ஏ.ஆர்.ஏ.பரீல்

கொள்­ளுப்­பிட்­டியில் கம்­பீ­ர­மாக நிமிர்ந்து நிற்கும் ஜும்ஆ பள்­ளி­வாசல் சுமார் 200 வரு­டங்கள் பழைமை வாய்ந்­த­தாகும். இப்­பள்­ளி­வா­சலின் புதிய  நிர்­வாக சபை தெரி­வுக்கு இன்று சவால்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள புதிய விஷேட நிர்­வாக சபைக்­கெ­தி­ராக வக்பு சபையில் வழக்­கொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கொள்­ளுப்­பிட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் சுமார் 1250 குடும்­பங்கள் வாழ்­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்­பள்­ளி­வா­சலில் இது­வரை காலம் பத­வி­யி­லி­ருந்த நிர்­வாக சபையின் பத­விக்­காலம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி காலா­வ­தி­யா­கி­யது. இந்­நி­லையில் அப்­போ­தைய நிர்­வாக சபை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு புதிய நிர்­வாக சபை தெரிவு தொடர்பில் கடிதம் ஒன்­றினை பதிவுத் தபால் மூலம் 2023 ஆகஸ்ட் 13ஆம் திகதி அனுப்பி வைத்­த­தாக அப்­போ­தைய நிர்­வாக சபை உதவிச் செய­லாளர் எம்.ஜே.எம். முபாறக் தெரி­வித்தார். கடி­தத்தில் புதிய நிர்­வாக சபை தெரி­வுக்கு திகதி ஒதுக்கித் தரு­மாறும் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ரு­வரை அன்­றைய தினம் அனுப்பி வைக்­கு­மாறும் கோரப்­பட்­டி­ருந்­தது எனவும் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஆனால் திணைக்­களம் பதில் அனுப்­ப­வில்லை. அதனால் புதிய நிர்­வாக சபையைத்  தெரிவு செய்­வ­தற்கு தேர்தல் நடத்­து­வது பற்றி நாம் இரண்டு ஜும்­ஆக்­களில் மக்­க­ளுக்கு அறி­வித்தோம்.

இந்­நி­லையில் கடந்த ஜன­வரி 9ஆம் திகதி முஸ்லிம் சமய  பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு பெட்­டிஷன் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதில் கொள்­ளுப்­பிட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பத­விக்­காலம் முடி­வ­டைந்­துள்­ளதால் விஷேட நம்­பிக்கைப் பொறுப்­பாளர் சபை­யொன்­றினை நிய­மிக்­கும்­படி கோரப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு நாங்கள் ஜன­வரி 14ஆம் திகதி கூட்­டப்­ப­ட­வி­ருந்த ஜமா அத்தார் சங்க பொதுக் கூட்­டத்­தையும் ரத்துச் செய்­யும்­ப­டியும் கோரப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்தே திணைக்­க­ளமும், வக்பு சபையும் எம்மை கடந்த ஜன­வரி 10ஆம் திகதி அழைத்து திடீ­ரென நிர்­வாக சபை கலைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வெற்­றி­டத்­துக்குப் புதி­தாக 9 பேர் கொண்ட விஷேட நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தது என்றும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், பதவி விலக்­கப்­பட்ட நிர்­வாக சபை கடந்த 16 வரு­டங்­க­ளாக தொடர்ந்து பதவி வகித்து வந்­துள்­ளது. எமது நிர்வா சபை மஹல்­லா­வா­சி­க­ளுக்கு பாரிய சேவை­களை செய்­துள்­ளது. தற்­போ­தைய வக்பு சபை எவ்­வித விசா­ர­ணை­களும் நடத்­தாமல் எம்மை பதவி விலக்­கி­யுள்­ளது.

தற்­போது விஷேட நிர்­வா­கி­க­ளாக 9 பேர் இப்­ப­குதி மக்­களை கலந்­தா­லோ­சிக்­காது வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வக்பு சபை இப்­ப­குதி மக்­களின் விருப்­பத்­து­டனே புதிய நிர்­வாக சபையைத்  தெரிவு செய்ய வேண்டும் என்று கோரு­கிறோம் என்றும் அவர் கூறினார்.

தற்­போ­தைய நிலை

வக்பு சபை இப்­பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­தற்­காக 9 பேர் கொண்ட புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மித்­தி­ருந்­தாலும் முன்­னைய நிர்­வாக சபை­யினால் உரிய ஆவ­ணங்கள் இன்னும் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. பழைய நிர்­வாக சபை ஆவ­ணங்­களைக் கைய­ளிக்க தொடர்ந்தும் மறுத்து வரு­கி­றது. அத்­தோடு புதிய விஷேட நிர்­வாக சபை தெரி­வி­னை­ய­டுத்து கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் ஒவ்­வொரு வாரமும் ஜும்ஆ தொழு­கை­யி­னை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லுக்குள்  மஹல்­லா­வா­சி­களால் அமைதிக் கண்­ட­னப்­போ­ராட்டம் நடத்­தப்­பட்டு வரு­கி­றது.  மக்கள் பதா­தை­களை ஏந்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள்.

‘ஜமா­அத்தைக் கூட்டி, புதிய நிர்­வாக சபையை தெரிவு செய்க’, ‘பின்­க­தவால் வந்­த­வர்­க­ளுக்கு பள்­ளி­வா­சலை நிர்­வ­கிக்க இட­ம­ளிக்க முடி­யாது’ என பதா­தைகள் தெரி­விக்­கின்­றன. பள்­ளி­வா­சலில் இரு தரப்­பி­ன­ருக்­கி­டையில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் முறைப்­பாடு செய்­யப்­பட்டு விசா­ரணை இடம்­பெற்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

வக்­பு­சபை என்ன கூறு­கி­றது?

வக்பு சபை சட்ட வரம்­புக்­குள்­ளேயே கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையைக் கலைத்து விட்டு அவ்­வெற்­றி­டத்­துக்கு புதி­தாக விஷேட நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மித்­துள்­ளது. இவ்­வி­ஷேட நிர்­வாக சபையில் 9 பேர் அங்கம் வகிக்­கின்­றனர். இந்­நி­ய­ம­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யும்­படி முன்னாள் நிர்­வா­கிகள் கோரி­யுள்ள அதே நேரத்தில் புதிய நிய­ம­னத்­துக்கு எதி­ராக வக்பு சபையில் வழக்­கொன்றும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் உறுப்­பி­ன­ரொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அத்­தோடு முன்னாள் நிர்­வாக சபை கணக்­கு­களை பரி­சோ­தனை செய்து வக்பு சபைக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வில்லை. மேலும் 2020 இலி­ருந்து ஜமா­அத்தார் பட்­டி­ய­லையும் சமர்ப்­பிக்­க­வில்லை. அத்­தோடு 2019 ஆம் ஆண்டு கடந்த நிர்­வாக சபை தாம் 300 கோடி ரூபா செலவில் அபி­வி­ருத்தி திட்­ட­மொன்­றினை வரைந்­துள்­ள­தாகக் கூறி கடந்த 6 வருட கால­மாக காலத்தைக் கடத்­தி­யுள்­ளது. ஆனால் எவ்­வித அபி­வி­ருத்தி திட்­டமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான கார­ணங்­களை முன்­வைத்தே முன்னாள் நிர்­வாக சபை பதவி நீக்கம் செய்­யப்­பட்டு புதிய விஷேட நிர்­வாக சபை நிய­மிக்­கப்­பட்­டது எனவும் அவர் கூறினார்.

புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள விஷேட நிர்­வாக சபைக்கு வக்பு சபை பொறுப்­பு­களை வழங்­கி­யுள்­ள­துடன் சில கட­மை­க­ளையும் பணித்­துள்­ளது. பள்­ளி­வாசல் சொத்து விப­ரங்­களை கைய­ளித்தல், உட­ன­டி­யாக ஜமா அத்தார் பட்­டி­யலைத் தயா­ரித்தல், பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட கணக்­க­றிக்­கையைச் சமர்ப்­பித்தல் என்­ப­னவே அவை.

முன்னாள் நிர்­வாக சபை என்ன கூறு­கி­றது?

வக்பு சபை குற்றம் சுமத்­தி­யுள்ள பள்­ளி­வாசல் கணக்கு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை முன்னாள் நிர்­வாக சபை ஏற்றுக் கொள்­கி­றது. முன்னாள் நிர்­வாக சபை உறுப்­பினர் எம்.ஜே.எம். முபா­ரக்­கிடம் இது தொடர்பில் வின­விய போது அது எங்­க­ளது தவறு என அவர் ஏற்­றுக்­கொண்டார்.

அத்­தோடு ஒவ்­வொரு வாரமும் வெள்­ளிக்­கி­ழமை தினம் மக்­களால் வழங்­கப்­படும் பணம் பள்­ளி­வாசல் அறி­வித்தல் பல­கையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார். வக்பு சபை முன்பு கணக்­க­றிக்கை தொடர்பில் எம்மைக் கோர­வு­மில்லை. நாம் வழங்­கவும் இல்லை என்றும் தெரி­வித்தார்.

பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட  3 வரு­டத்­துக்­கான கணக்­க­றிக்­கையை கடந்த ஜன­வரி 10ஆம் திகதி வக்பு சபை­யிடம் ஒப்­ப­டைத்தோம். அதற்கு முன்­னைய கணக்கு விப­ரங்கள் கணி­னி­யி­லி­ருந்து அழி­வ­டைந்­துள்­ளது. அது தொடர்­பான விப­ரங்­களை சம்­பந்­தப்­பட்ட வங்­கி­யிடம் கோரி­யி­ருக்­கிறோம். கிடைத்­ததும் வக்பு சபை­யிடம்  கைய­ளிப்போம்.

வக்பு சபை குற்றம் சுமத்­தி­யுள்ள 300 கோடி செல­வி­லான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­ட­மொன்­றினை முன்­னெ­டுப்­ப­தாக கூறி வெறு­மனே காலத்தைக் கடத்­தி­யது தொடர்பில் முன்னாள் நிர்­வாக சபை­யிடம் விளக்கம் கோரிய போது முபாரக் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

‘300 கோடி ரூபா செல­வி­லான அபி­வி­ருத்தி திட்­ட­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்கு நாம் திட்டம் வகுத்­தி­ருந்தோம். 2019இல் இத்­திட்டம் வகுக்­கப்­பட்­டது.  என்­றாலும் அத்­திட்­டத்தை சில கார­ணங்கள் நிமித்தம் முன்­னெ­டுக்க முடி­யாமற் போனது. திட்­டத்தை முன்­னெ­டுக்க இஸ்­லா­மிய வங்­கியில் கடன் எடுக்க வேண்­டி­யி­ருந்­தது. அதற்­கான நிதியம் ஒன்­றி­னையும் உரு­வாக்கி 15 பேர் கொண்ட குழு­வி­ன­ரையும் நிய­மித்தோம்.

இந்த திட்டம் 8 மாடி­களைக் கொண்ட கட்­டி­ட­மொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தாகும். இத்­திட்­டத்­துக்கு அரு­கி­லி­ருக்கும் அலரி மாளிகை (Temple trees) அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. கட்­டி­டத்­துக்­கான வரை­ப­டமும் தயார் நிலையில் இருந்­தது. கட்­டிடம் அமை­ய­வுள்ள காணிக்கு கீழால் நிலத்­த­டியில் கழிவு நீர் செல்­வதால் மாந­கர சபை அனு­மதி தர­வில்லை. இக் கழிவு நீரை முகா­மைத்­துவம் செய்து மாற்று வழியால் செல்­வ­தற்கு பல மில்­லியன் ரூபா திட்டம் வகுத்­தி­ருந்தோம். ஆனால் இத்­திட்­டங்­களின் ஆரம்ப பணிகள் நிறை­வுற்ற நிலையில் எமது பத­விக்­காலம் முடிந்­து­விட்­டது.

பின்பு கொரோனா காலத்­திலும் நாம் தொடர்ந்து பதவி வகிக்க வேண்­டி­யேற்­பட்­டது என்றார்.

வக்பு சபை தீர்வு வழங்க வேண்டும்

வக்பு சபை ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகங்கள் மீதும் வக்பு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் விவகாரத்தில் பள்ளிவாசலின் வருடாந்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட கணக்கறிக்கையை முன்னைய வக்பு சபை பொறுப்பாளர் கோரவில்லை. அதனால் நாம் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளுக்கு வக்பு சபை இடம் வைக்கக்கூடாது. இதன் பின்பேனும் தற்போது அதிகாரத்திலுள்ள வக்பு சபை பொறுப்புணர்ச்சியுடன் தியாக சிந்தையுடன் செயற்பட வேண்டும். இதேவேளை பள்ளிவாசல் நிர்வாகங்கள் தமது பொறுப்புகளை ஏனோ தானோவென்று  முன்னெடுக்கக் கூடாது  என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.