இராஜாங்க அமைச்சின் செயலாளராக அமீர்

தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார விவ­கார இரா­ஜாங்க அமைச்சின் செய­லா­ள­ராக இலங்கை நிர்­வாக சேவையின் விஷேட தரத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யான எம்.ஐ.அமீர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நிர்­வாக சேவையில் சுமார் 32 வரு­ட­கால அனு­ப­வத்தைக் கொண்ட சிரேஷ்ட அதி­கா­ரி­யான இவர், ஆரம்­பத்தில் அம்­பாறை மாவட்ட காணி அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றினார்.  பின்னர் சம்­மாந்­துறை, கல்­முனை பிர­தேச செய­ல­கங்­களின் பிர­தேச செய­லா­ள­ரா­கவும், அம்­பாறை மாவட்ட மேல­திக அர­சாங்க அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். இத­னை­ய­டுத்து தொலைத்­தொ­டர்­புகள்,…

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட வேண்டும்

கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி உண்­மையை வெளி­யி­டு­மாறு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையில் நேற்று பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்து சபையின் உப தவி­சா­ளாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­யு­மான எஸ்.எம்.எம்.ஹனீபா உரை­யாற்­று­கையில், அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக…

ஜனாதிபதி வேட்பாளராக என்னால் வர முடியும்

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்தை பிர­தா­ன­மா­கக்­கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளு­டனும் 19ஆம் திருத்­தத்தை உறு­திப்­ப­டுத்­து­ப­வர்­க­ளு­டனும் இணை ந்தே என்னால் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக வர­மு­டியும். அத்­துடன் இதற்கு ஐக்­கிய தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­களின் ஆசிர்­வாதம் கிடைக்க வேண்­டு­மென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­வ­ரு­மாறு தெரி­விக்­கப்­படும் கோரிக்­கை­க­ளுக்குப் பதி­ல­ளித்து விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 09

“இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை என்ற ஒன்று உள்­ள­தாகக் கூறப்­ப­டு­வது அப்­பட்­ட­மான பொய்” என மஹிந்­தவின் பக்­தர்­களில் ஒரு­வ­ரான உதய கம்­மன்­பில சமீ­பத்­திய பத்­தி­ரிகைச் செவ்­வி­யொன்றில் கூறி­யி­ருந்தார். முஸ்லிம் சனத்­தொகை வளர்ச்சி வீதம் குறித்து இதே­போன்ற ஒரு வாக்­கி­ய­முண்டு. முஸ்­லிம்­களின் சனத்­தொகை வளர்ச்சி சிங்­க­ள­வர்­களைச் சிறு­பான்­மை­யாக்­கி­விடும் என்ற கம்­மன்­பி­லவின் வார்த்தை அப்­பட்­ட­மான பொய்­யாகும். 1990 களின் காலப்­ப­கு­தியில் ITN தொலைக்­காட்­சியில் ஒரு வாராந்த கலந்­துரை யாடலின் மூலம் தனது பிர­சாரப்…