ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பில் துண்டு பிரசுரம்

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும்…

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

இந்­தே­னே­சி­யாவின் வடக்கு சுல­வேசி மாகா­ணத்தில் தங்கச் சுரங்­க­மொன்று இடிந்து வீழ்ந்­ததில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 16 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­தாக தேசிய அனர்த்த முன்­னா­யத்த முக­வ­ர­கத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். விபத்தின் தற்­போ­தைய நிலை­வரம் தொடர்பில் தகவல் வெளி­யிட்ட பேச்­சாளர் சுடோபோ புர்வோ நுக்­ரோஹோ, கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் மேலும் ஏழு உடல்கள் கண்­டெ­டுக்கப் பட்­ட­தாகத் தெரி­வித்தார். மீட்புப் பணி­யா­ளர்கள் இது­வரை 18 பேரை உயி­ருடன் மீட்­டுள்­ளனர் எனவும் நுக்­ரோஹோ தெரி­வித்தார். அனு­மதி…

சிலாவத்துறை காணி மீட்பு விவகாரம்: ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முடிவு

சிலாவத்துறை கடற்படை முகாமை  அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும் கட்சி,…

அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்

முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ருதி பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை பதிவு செய்­வதே எமது நிரந்­தரப் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­மாக அமையும் எனவும் இன்­றைய காலத்தைப் பொறு­வத்­த­வ­ரை­யிலும்  எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கு­மென்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால்­துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார். முஸ்லிம் சமயம் கலா­சாரம் மற்றும் தபால்­துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின்…