ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பில் துண்டு பிரசுரம்

0 534

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும் நட­வ­டிக்­கைக்கு பங்­க­ளிப்பு வழங்க வேண்டும் என ‘சிங்­களே அபி” அமைப்பின் தலைவர் ஜம்­பு­ரே­வெல சந்­த­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நியா­மற்ற வகை­யி­லேயே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்ற விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டு நாட­ளா­விய ரீதியில் 50 இலட்சம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை பொது­ப­ல­சேனா அமைப்பு நேற்­றைய தினம் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக ஆரம்­பித்­தி­ருந்­தது.

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். குறித்­த­வொரு வழக்கு தொடர்பில் நீதி­மன்றம் வழங்கும் தீர்ப்பு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனும் பட்­சத்தில் அது குறித்து முறைப்­பாடு செய்யும் உரிமை அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் உண்டு. ஆனால் அதனை உரி­ய­வர்­க­ளி­டத்தில் முறைப்­பாடு செய்ய முடி­யா­மையின் கார­ண­மா­கவே மக்­க­ளி­டத்தில் இதனை தெளி­வு­ப­டுத்­து­கின்றோம்.

தற்­போது சட்­டமா அதிபர் திணைக்­களம் அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்கு அமை­வாக செயற்­பட்டு வரு­கின்­ற­தொரு நிலையே உள்­ளது. அதனால் சமூ­கத்தின் நன்­மைக்­காக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அத்­த­கைய ஒரு­வர்தான் ஞான­சார தேரர். அவர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே தண்­டிக்­கப்­பட்­டுள்ளார் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு போதி­ய­ள­வான சாட்­சிகள் எம்­மிடம் உள்­ளன.

ஞான­சா­ர­ருக்கு ஜனா­தி­பதி பொது­மன்­னிப்பு வழங்­குவார் என்ற நம்­பிக்­கை­யுள்ள போதிலும், அவ்­வாறு விடு­விக்­கப்­ப­ட­வில்லை எனின் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் முறைப்­பாடு செய்­யவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது என்ற தகவல்களின் ஊடாக யுத்தத்தை வென்றெடுத்தவர்களை சிறையிலடைக்கும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது புலனாகின்றது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.