அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு ஒரு பகி­ரங்க மடல்

0 189

சென்ற 18.04.2024 இல் வெளி­வந்த விடி­வெள்ளி வாராந்த வெளி­யீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்­னிப்பா? ஆணைக்­கு­ழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்­டுரை எழு­தி­யி­ருந்தேன். அதனை வாசித்த சிலர் என்­னுடன் தொடர்பு கொண்டு “காலத்­திற்குத் தேவை­யான ஒரு விட­யத்தை சமூ­கத்­திற்கு முன் எடுத்து வைத்­துள்­ளீர்கள். இது சம்­பந்­த­மாக நமது சமூகம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி ஆலோ­சித்து இவ்­வி­ட­யத்­ததை நூர்ந்து போக விடாது தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாமே!” என்று பலரும் பல ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளனர். அதன் விளை­வாக உங்­க­ளுக்கு இந்த பகி­ரங்க மடலை எழுத முன்­வந்தேன்.

இஸ்­லாத்தின் அடிப்­படைக் கொள்­கை­க­ளின்­படி ஒரு முஸ்லிம் மர­ணித்து விட்டால் அந்த ஜனா­ஸாவைக் குளிப்­பாட்­டு­வது, கப­னி­டு­வது, தொழுகை நடாத்­து­வது, நல்­ல­டக்கம் செய்­வது என்ற இந்த நான்கு கட­மை­க­ளையும் உயி­ரோ­டி­ருப்­ப­வர்கள் நிறை­வேற்றி வைக்க வேண்டும். இது அவர்கள் மீது பர்ளு கிபா­யா­வாகும் என்ற இந்த விதி முஸ்­லிம்கள் அனைவர் மீதும் கட­மை­யாகும். சிலர் செய்­தாலும் சக­லரின் மீதுள்ள கட­மையும் நிறை­வே­றி­விடும் என்ற உண்­மையை அனை­வரும் நன்­க­றிவர். அத்­துடன் ஒவ்­வொரு மனி­த­னதும் அடிப்­படை மனித உரி­மை­யு­மாகும் என்­பதை சிறு பிள்­ளை­கூட தெரிந்து வைத்­துள்­ளனர்.

விடயம் இவ்­வா­றி­ருக்க சென்ற 2019ஆம் ஆண்டில் சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­பட்ட கொவிட் 19 என்ற கொரோனா பேர­ழிவு நோயின் கார­ண­மாக இலட்சக் கணக்­கான மக்­களின் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டன. இதற்கு நமது நாடும் விதி­வி­லக்­கல்ல என்­பதை நாம் அறிவோம். ஒவ்­வொரு பிர­தே­சத்­திலும் வாழ்ந்­த­வர்கள் தங்­களின் சக்­திக்கும், சமய அனுஷ்­டா­னங்­க­ளுக்கும் ஏற்ப தங்கள் தங்கள் பணி­களைச் செய்து முடித்­தனர்.

நமது நாட்டில் இந்தக் கொடிய நோய் பரவ ஆரம்­பித்து ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு கொண்­டது. இவர்­களுள் பௌத்த, கிறிஸ்­தவ, இந்து, இஸ்­லா­மிய என்ற பாகு­பா­டின்றி மர­ண­ம­டைந்­த­வர்­களின் பிரே­தத்தைத் தகனம் செய்­ய­வேண்­டு­மென்று சுகா­தா­ரத்­துறை சார்ந்த மெத்­தப்­ப­டித்த மேதா­விகள் பலர் விடாப்­பி­டி­யாக இருந்­தனர். ஏனைய சம­யத்­த­வர்­க­ளுக்கு இது ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக இருக்­க­வில்லை. அர­சாங்கம் சொல்­வ­தற்கு செவி­ம­டுத்துக் கொண்டு அவர்கள் வாளா­வி­ருந்­தனர்.

ஆனால் இது நமது சமூ­கத்­திற்கு பெரி­யதோர் ஆபத்­தான நிலை­மை­யாகும். நமது சமயக் கட­மை­களைச் செய்­யக்­கூட முடி­யாத சூழல். அர­சியல் தலை­மை­களும், ஆத்­மீகத் தலை­மை­களும் இவ்­வி­ட­யத்தில் கரி­சனை கொண்டு நாட்டின் சர்­வா­தி­கா­ரங்­க­ளையும் தன்­வசம் வைத்­தி­ருந்த அன்­றைய ஜனா­தி­பதி கோத்­த­பாயவிடம் கெஞ்சிக் கேட்டும் அக்­கோ­ரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. பிறந்து இரண்டு மாதங்­கள்­கூட நிறை­வே­றாத குழந்­தையின் சட­லத்­தையும் எரித்­தனர். “தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட உடல்­களின் சாம்­ப­லை­யா­வது தாருங்கள் நாங்கள் அதை­யா­வது அடக்கம் செய்­கிறோம்” என்று எமது ஜம்­இய்­யாவின் தலைமை வேண்­டுகோள் விடுத்­தும்­கூட அந்த வேண்­டு­கோளும் செவிடன் காதில் ஊதப்­பட்ட சங்­கா­கவே போய்­விட்­டது.

இவை­க­ளெல்லாம் நாம­றிய நடந்து முடிந்த விட­யங்கள். வழக்­கம்போல் அல்­லாஹ்வின் மீது பாரத்தைச் சாட்டி விட்டு நாம் அமை­தி­ய­டைந்தோம். இச்­செ­ய­லுக்­காக நீதி­மன்றம் செல்­லக்­கூட எந்தத் தலை­மையும் முன்­வ­ர­வில்லை என்ற கசப்­பான உண்­மையை நாம் ஏற்றுக் கொள்­ளத்தான் வேண்டும்.

இச்­ச­ம­யத்­தில்தான் சம்­மாந்­து­றை­யைச் சேர்ந்த ஒரு பெண் வைத்­தியர் முன் வந்தார். அவ­ரது தந்தை இப்­றாஹீம் ஆசி­ரியர் என்­பவர் கொரோ­னா­வினால் பாதிக்­கப்­பட்டு இறந்தார். அவ­ரது உட­லைத்­த­கனம் செய்ய ஆயத்­தங்கள் செய்­யப்­பட்­ட­போது அந்தப்­பெண்­மணி துணிச்­ச­லுடன் நீதி­மன்­றத்­திற்குச் சென்று தகனம் செய்­யக்­கூ­டா­தென்று தடுப்பு ஆணை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். சில நாட்­களில் அவ­ரது ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இப்­ப­ணியை நாமோ நமது சமூகத் தலை­மை­களோ தைரி­ய­மாக முன்­னின்று அன்று நீதி­மன்­றத்தை நாடி­யி­ருந்தால் நூற்­றுக்­க­ணக்­கான ஜனா­ஸாக்­களை தகனம் செய்­வ­தி­லி­ருந்து தடுத்­தி­ருக்­க­லாமா என்று எண்­ணத்­தோன்­று­கி­றது. நடந்­தது நடந்து முடிந்து விட்­டது.

இப்­போ­துள்ள சூழ்­நி­லையில் நாம் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன? என்ற கருத்து முளை­விட ஆரம்­பித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய தான் எழு­திய நூலில் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாகக் குறிப்­பிட்டு “ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய வேண்டும் என்­பதே எனது நிலைப்­பாடு. அதுவும் கொங்றீட் பெட்­டி­களில் அடக்கம் செய்ய ஆலோ­சித்­தி­ருந்தேன். ஆனால் சுகா­தார அமைச்சின் நிபு­ணர்கள் அதற்கு இடம்­த­ர­வில்லை. பேரா­சி­ரியர் மெத்­தி­காவே தகனம் செய்ய வேண்­டு­மென்ற தீர்­மா­னத்தில் உறு­தி­யா­க­வி­ருந்தார்” என்று முழு நாட்­டி­னதும் சர்­வ­தே­சத்­தி­னதும் வேண்­டு­கோ­ளுக்குச் செவி­சாய்க்­காத, மதிப்­ப­ளிக்­காத சர்வ அதி­காரம் பெற்­றி­ருந்த அவர் இவ்­வாறு ஒப்­புக்­கொண்டு தனது இய­லா­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இளம் அமைச்சர் ஜீவன் தொண்­டமான் ஜனாஸா எரிப்­புக்­காக அரசு மன்­னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இதற்­கான ஆய்­வ­றிக்­கை­யுடன் கூடிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்றை விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் கூறு­கின்றார்.

உல­மாக்கள் சபையின் தலைவர் அவர்­களே! இந்த நிலை­மை­களை நமக்குச் சாத­க­மாக ஆக்­கிக்­கொண்டால் என்ன என்று என் மனம் எண்ண வைக்­கி­றது.

ஜனா­ஸாக்­களின் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு சந்­தர்ப்பம் அளிக்­காமல் இருந்­தது மனித உரிமை மீற­லல்­லவா? மனித உரிமை மீறல் என்ற விதியின் கீழ் அல்­லது வேறு பொருத்­த­மான விதி­களின் கீழ் நமது சமூ­கத்­தி­லுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்று உயர் நீதி­மன்றில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தால் என்ன? தீர்ப்பு நமக்குச் சாத­க­மா­கவோ அல்­லது பாத­க­மா­கவோ வரலாம். இனிமேல் வரும் காலங்­க­ளி­லா­வது நமது சமூ­கத்­திற்கு இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­க­வா­வது இவ்­வி­ட­யத்தில் முயற்சி செய்தால் என்ன?

இவ்­வி­ட­யத்தில் முன்­னிற்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவே மிகப் பொருத்­த­மான ஸ்தாப­ன­மாகும். ஏனைய தலை­மைத்­து­வங்கள் தலை­யிட்டால் சில வேளை­களில் அது அர­சியல் இலாபம் தேடும் செயல் என விமர்­சிக்­கப்­ப­டலாம். எனவே, ஜம்­இய்­யாவின் தலைமை இவ்­வி­ட­யத்தை முன்­னெ­டுப்­பது நமது சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட துய­ர­மான நிகழ்­வுக்கு தஃஸியத் ஆறுதல் கூற­வா­வது முன்­வ­ர­லா­மல்­லவா?

இதற்­கான செல­வு­களைச் சமா­ளிப்­ப­தற்கு நமது சமூகம் ஒருநாளும் பின்நிற்க மாட்டாது. காஸாவில் அல்லலுறும் குழந்­தை­க­ளுக்­காக கோடிக்­க­ணக்கில் அள்­ளிக்­கொ­டுக்கும் சமூ­க­மல்­லவா? நாம்.

நீதி­மன்றை நாடினால் என்ன? என்று என் மனம் விரும்­பி­யது. சில­ரிடம் ஆலோ­சனை கேட்டேன். பொருத்­த­மான நேரத்தில் தேவை­யான ஆலோ­சனை என்று கூறி உற்­சாகம் தந்­தனர்.

இவ்­வி­டயம் சிறந்­தது என்று நீங்­களும் கரு­தினால் துணிந்து முன்­வா­ருங்கள். உங்­க­ளுக்கு அல்­லாஹ்வின் அருளும் நமது சமூ­கத்தின் ஆசீர்­வா­தமும் கிடைக்கும். முயற்சித்துப் பார்க்கலாமா?

அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி வெற்றி பெறச்செய்வானாக! ஆமீன்.

இங்ஙனம்,
ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)
சம்மாந்துறை.
2024.04.21.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.