இந்தோனேசியாவில் தங்கச் சுரங்க விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

0 507

இந்­தே­னே­சி­யாவின் வடக்கு சுல­வேசி மாகா­ணத்தில் தங்கச் சுரங்­க­மொன்று இடிந்து வீழ்ந்­ததில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 16 ஆக உயர்­வ­டைந்­துள்­ள­தாக தேசிய அனர்த்த முன்­னா­யத்த முக­வ­ர­கத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

விபத்தின் தற்­போ­தைய நிலை­வரம் தொடர்பில் தகவல் வெளி­யிட்ட பேச்­சாளர் சுடோபோ புர்வோ நுக்­ரோஹோ, கடந்த சனிக்­கி­ழமை தொடக்கம் மேலும் ஏழு உடல்கள் கண்­டெ­டுக்கப் பட்­ட­தாகத் தெரி­வித்தார்.

மீட்புப் பணி­யா­ளர்கள் இது­வரை 18 பேரை உயி­ருடன் மீட்­டுள்­ளனர் எனவும் நுக்­ரோஹோ தெரி­வித்தார். அனு­மதி பெறப்­ப­டாத சுரங்­க­மொன்றில் கடந்த பெப்­ர­வரி 26 ஆம் திகதி இடம்­பெற்ற சரிவில் எண்­ணிக்கை தெரி­யாத அளவில் பணி­யா­ளர்கள் சிக்­குண்­டனர்.

தேடுதல் பணிகள் எதிர்வரும் மார்ச் 11 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.