வெலிகம மத்ரஸாவை மூடுமாறு திணைக்களம் உத்தரவிட்டது ஏன்?

0 189

ஏ.ஆர்.ஏ.பரீல்

அரபுக் கல்­லூ­ரிகள் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் அரபுக் கல்­லூ­ரி­யொன்றில் கல்வி பயின்­று­வந்த மாணவன் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

தூக்கில் தொங்­கிய மாணவன் தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­க­வில்லை. அர­புக்­கல்­லூரி நிர்­வா­கி­யான மெள­லவி ஒரு­வ­ரினால் அடித்துக் கொலை செய்­யப்­பட்­ட­தாக மெள­லவி மீதே குற்றம் சுமத்­தப்­பட்­டது. தற்­போது அவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் உள்ளார்.

இந்­நி­லையில் மேலு­மொரு அரபுக் கல்­லூ­ரியில் மாணவன் ஒருவன் பல­மாக தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் செய்­திகள் வலம் வந்­தன. இந்தக் குற்­றச்­சாட்­டி­னை­ய­டுத்து அந்த அரபுக் கல்­லூ­ரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடி விடு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

வெலி­கம, கல்­பொக்க, புகாரி மஸ்ஜித் மாவத்­தையைச் சேர்ந்த மத்­ர­ஸதுல் பாரி அர­புக்­கல்­லூ­ரியின் தலை­வ­ருக்கே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2024.01.19ஆம் திக­தி­யிட்ட MRCA/13/1/AC/35ஆம் இலக்க, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் என். நிலோபர் கையொப்­ப­மிட்ட மத்­ர­ஸதுல் பாரி அர­புக்­கல்­லூ­ரியின் தலை­வ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் கல்­லூ­ரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடி­விடும் படி வேண்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘கடந்த 2024.01.16 ஆம் திகதி தங்­களின் அரபுக் கல்­லூ­ரியில் ஒரு ஆசி­ரியர் மூலம் மாணவன் ஒருவன் பல­மாக தாக்­கப்­பட்ட விடயம் திணைக்­க­ளத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது.

மேற்­படி விடயம் தொடர்­பாக கல்­லூரி நிர்­வாகம் மற்றும் ஆசி­ரி­யர்­களை விசா­ரணை செய்ய திணைக்­களம் திட்­ட­மிட்­டுள்­ளது. விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் திகதி பின்னர் அறி­விக்­கப்­படும். எனவே திணைக்­க­ளத்தின் விசா­ரணை முடி­வுறும் வரை 2024.01.19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக கல்­லூ­ரியை மூடி பாது­காப்­பாக மாண­வர்­களை பெற்­றோர்கள் / பாது­கா­வ­லர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றீர்கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரி அரபுக் கல்­லூரி
கல்­பொக்க, வெலி­க­மயில் அமைந்­துள்ள மத்­ர­ஸதுல் பாரி அரபுக் கல்­லூரி 140 வரு­ட­காலம் வர­லாற்­றினைக் கொண்­ட­தாகும். இங்கு நாடெங்­கி­லு­மி­ருந்து தற்­போது 185 மாண­வர்கள் கல்வி பயின்று வரு­கி­றார்கள். இக் கல்­லூ­ரியில் 20 உஸ்­தாத்­மார்கள் (ஆசி­ரி­யர்கள்) கல்வி போதிக்­கி­றார்கள்.

இக்­கல்­லூ­ரியின் அதி­ப­ராக அப்துல் ரஹ்மான் (மலா­ஹிரி) கடந்த 25 வருட கால­மாக பணி­யாற்றி வரு­கி­றார்.

அதிபர் அப்துல் ரஹ்­மானை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு பதில் வழங்­கினார்.
“அடித்து காயங்­க­ளுக்­குள்­ளான மாணவர் ஹிப்ழு வகுப்பில் பயில்­ப­வ­ராவார். இம்­மா­ணவர் தான் தாக்­கப்­பட்­டுள்ளார். குறித்த மாணவர் தொடர்ச்­சி­யாக நான்கு நாட்கள் தான் ஒவ்­வொரு நாளும் ஆசி­ரி­ய­ரிடம் பாடத்தை ஒப்­பு­விக்­க­வில்லை. நான்கு நாட்கள் பாடம் கொடுக்­க­வில்லை. இதற்குத் தண்­ட­னை­யா­கவே மாண­வனை அடித்­துள்ளார். இதனால் மாணவன் சிறிது காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்­கிறார்.

இச்­சம்­பவம் கடந்த 16ஆம் திகதி காலை 6 மணிக்கு இடம்­பெற்­றுள்­ளது. காலையில் ஆசி­ரி­ய­ரிடம் அடி­வாங்­கிய மாணவர் அன்று நண்­ப­கலே வீட்­டுக்குப் போய்­விட்டார். வீடு சென்ற மாண­வனை அவ­ரது சாச்சா முறை­யான ஒருவர் வீடியோ பதிவு செய்­துள்ளார்.

அடுத்த நாள் 17ஆம் திகதி குறிப்­பிட்ட மாணவர் கல்­லூ­ரிக்கு அழைத்து வரப்­பட்டு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கல்­லூ­ரியில் விடப்­பட்டார். மாண­வரின் மாமா முறை­யான ஒரு­வரும் உட­த­ல­வின்ன ஹக்­கீ­மியா அர­புக்­கல்­லூ­ரியில் ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்றி வரு­கிறார்.

கல்­லூ­ரிக்கு அழைத்து வரப்­பட்ட மாணவர் கல்­லூ­ரியில் வர­வேற்­கப்­பட்டார். வேறு ஒரு ஹஸரத்தை பாடம் கேட்­க ஒதுக்கித் தரு­வ­தா­கவும் அவ­ரிடம் படிக்கும் படியும் நான் மாண­வ­னிடம் கூறினேன். ஒரு நாள் கல்­லூ­ரியில் படித்தார். இதே­வேளை மாண­வனின் தாயார் அவரை கடந்த 17ஆம் திகதி சிகிச்­சைக்­காக டாக்­ட­ரிடம் அழைத்துச் சென்றார்.

இந்­நி­லை­யிலே மாண­வரின் சாச்சா பதிவு செய்த வீடியோ அவ­ரது நண்பர் ஒருவர் மூலம் சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­பட்­டது. இத­னை­ய­டுத்து கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபையை (Board) கூட்­டினேன். நிர்­வாகம் சம்­பந்­தப்­பட்ட உஸ்­தாதை (ஆசி­ரி­யரை) பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­தது. அதன் படி ஆசி­ரியர் பத­வி­யி­லி­ருந்து அவர் நீக்­கப்­பட்டார். இந்த ஆசி­ரியர் கல்­லூ­ரியில் கடந்த 26 வரு­டங்­க­ளாக சேவையில் இருந்­தவர்.

மாண­வரை ஆசி­ரியர் அடித்துக் காயப்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் வெலி­கம பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் களுத்­துறை பிராந்­திய அதி­கா­ரிகள் இருவர் வருகை தந்து விசா­ரணை நடத்­தி­னார்கள். மாண­வரின் பெற்­றோரும் பொலிஸ் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

கடந்த 19ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு சம்­பந்­தப்­பட்ட மாணவன் வெலி­கம வலான வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். பின்பு கடந்த சனிக்­கி­ழமை சிகிச்­சையின் பின்பு வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தும் அவர் விடு­விக்­கப்­பட்டார். மாண­வ­ருக்கு எந்­த­வித பாதிப்பும் இல்லை என்றே வைத்­தி­ய­சாலை அறிக்கை தெரி­விக்­கி­றது.

மாணவன் ஆசி­ரி­ய­ரினால் அடிக்­கப்­பட்ட சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி அதன் மூலம் சுய­லாபம் பெற ஒரு தரப்­பி­னர் முயன்று வரு­கின்­றனர். அந்த தரப்­பினர் மாணவர் அவ­ரது வீட்டில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக வெலி­கம பொலிஸில் புகாரும் செய்­துள்­ளனர். அர­புக்­கல்­லூ­ரிக்கும், பள்­ளி­வா­ச­லுக்கும் நிர்­வாக தெரிவு தொடர்பில் பிரச்­சினை ஒன்று நில­வு­கி­றது. வக்பு ட்ரிபி­யுனில் வழக்­கொன்றும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளது. இத­னுடன் தொடர்­புள்­ள­வர்­களே அரபுக் கல்­லூ­ரியை மூடி­வி­டு­வ­தற்கு முயற்­சிகள் எடுத்து வரு­கி­றார்கள்.
விசா­ர­ணைக்கு வருகை தந்த முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளிடம் நாம் நிலை­மையை விளக்­கி­யுள்ளோம். சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யரை உட­ன­டி­யாக பத­வி­யி­லி­ருந்தும் நீக்­கி­ய­மையை எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். காயங்­க­ளுக்­குள்­ளான மாணவன் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து ஒரே நாளில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார் என்­ப­தையும் தெரி­வித்­துள்ளோம்.
185 மாண­வர்கள் கல்­லூ­ரியில் பயில்­கி­றார்கள். எம்மால் உட­ன­டி­யாக கல்­லூ­ரியை மூடி­விட முடி­யாது. திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் கடந்த சனிக்­கி­ழமை மாண­வ­ரையும் அவ­ரது தாயா­ரையும் அழைத்து விசா­ரித்­தார்கள். கல்­லூரி நிர்­வாகம் சட்­டத்­த­ர­ணி­யூ­டாக மேல­திக நகர்­வு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்றார்.

விவ­காரம் சமா­தா­ன­மாகத்
தீர்த்து வைக்­கப்­பட்­டது
பாதிக்­கப்­பட்ட கல்­லூரி மாண­வனும், மாண­வ­ரி­னது தாயாரும் சம்­பந்­தப்­பட்ட கல்­லூரி ஆசி­ரி­யரும் கடந்த திங்­கட்­கி­ழமை காலை வெலி­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

வெலி­கம பொலிஸார் இரு தரப்­பி­ன­ரையும் சமா­தானம் செய்து வைத்­தனர்.
சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரியர் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து கல்­லூரி நிர்­வா­கத்­தினால் ஏற்­க­னவே பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்ளார்.
பொலிஸார் இரு தரப்­பி­ன­ரி­டையே சமா­தா­னத்தை நிலை­நி­றுத்­தி­ய­தை­ய­டுத்து சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரியர் மீண்டும் பத­வியில் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வாரா? என கல்­லூரி அதி­ப­ரிடம் வின­விய போது அது­தொ­டர்பில் பின்னர் ஆலோ­சித்து தீர்­மா­னிக்­கப்­படும் என அவர் கூறினார்.

பணிப்­பாளர் இஸட். ஏ.எம். பைஸல்
பாரி அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் மெள­லவி அப்துல் ரஹ்­மானின் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த திங்­கட்­கி­ழமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட்..ஏ.எம். பைஸலை திணைக்­க­ளத்தில் சந்­தித்து கல்­லூரி விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். இச்­சந்­திப்பு சுமு­க­மாக இடம்­பெற்­றது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் குறிப்­பிட்ட கல்­லூ­ரியை கடந்த 19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடி­வி­டு­மாறு உத்­த­ர­விட்­டாலும் கல்­லூ­ரியில் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் மாண­வர்கள் பயில்­வதால் அவர்கள் போக்­கு­வ­ரத்து சிக்கல் கார­ண­மாக தொடர்ந்தும் கல்­லூ­ரியில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்விவகாரம் தொடர்பில் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸலை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியது, ‘பாரி அரபுக்கல்லூரியில் தொடர்ந்தும் மாணவர்கள் இருப்பதாகவும் ஆனால் கல்லூரி இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கல்லூரி பள்ளிவாசலுடன் தொடர்புபட்டு இயங்கி வருவதால் இப்பிரச்சினை தொடர்பில் வக்பு சபையுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. என்றாலும் கல்லூரியை தற்காலிகமாக மூடிவிட வேண்டும் என்ற எனது உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது. அந்த உத்தரவு ரத்துச் செய்யப்பட வில்லை என்றார்.

அரபுக்கல்லூரிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. பாடசாலைகளில் அல்லது அரபுக் கல்லூரிகளில் மாணவர்கள் எந்தக் கார­ணங்­க­ளுக்­கா­கவும் தண்டிக்கப்படும் கலா­சாரம் முற்­றாக நிறுத்­தப்­பட வேண்­டும்.அரபுக்கல்லூரிகள் இது விடயத்தில் மிகக் கவ­ன­மாக செயற்­ப­ட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.