முஸ்லிம் விவாக, விவாக இரத்துச் சட்டம் இரகசியமாக திருத்தம் செய்யக் கூடாது

பேரியல் தலைமையில் பெண்கள் குழு பிரதமரிடம் வலியுறுத்து

0 189

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. முதலில் அத்­தி­ருத்­தங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்பே சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­விடம் வலியுறுத்தியுள்­ளது.

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்­ரபின் தலை­மை­யி­லான முஸ்லிம் பெண்கள் பிர­தி­நி­திகள் குழு­வொன்று பிர­த­மரை நேரில் சந்­தித்து இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ளது. இச்­சந்­திப்பு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அலரி மாளி­கையில் இடம்­பெற்­றுள்­ளது.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தாம­திக்­கப்­ப­டக்­கூ­டாது. தாம­தங்கள் மேலும் பாதிப்­பு­க­ளையே ஏற்­ப­டுத்தும் எனவும் பிர­த­ம­ரிடம் சுட்டிக்காட்­டப்­பட்­டுள்­ளது. முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சட்­ட­த­்தரணி சப்­ரி­ஹ­லீம்­தீனின் தலை­மை­யி­லான குழு திருத்­தங்கள் தொடர்­பான சிபா­ரி­சுகள் அடங்­கிய தனது அறிக்­கையை தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்தும் திருத்த சட்­ட­மூலம் தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது குறித்தும் நாம் பிர­த­ம­ரிடம் அதி­ருப்­தியை வெளி­யிட்­ட­தாக குறிப்­பிட்ட குழுவின் பிர­தி­நி­தி­களில் ஒரு­வா­ரான ஹசனா சேகு இஸ்­ஸதீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

பல­தார திரு­மண அனு­ம­தியில் பல இறுக்­க­மான நிபந்­த­னைகள் குர்­ஆனின் வழி­காட்­ட­லுடன் உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­தோடு பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அமைய வேண்­டு­மெ­னவும் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளோம்.

சட்­டத்தை மாற்­று­வதன் மூலம் மாத்­திரம் தீர்­வு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. இள­வ­யது திரு­ம­ணங்­களை இல்­லாமற் செய்­வ­தற்கு பெண்கள் குறைந்­தது க.பொ.த. உயர்­தரம் வரை­யி­லா­வது பாட­சாலைக் கல்­வியைப் பெற்றுக் கொள்­வதை அரசு உறு­திப்­ப­டுத்த வேண்டும். விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

காதி நீதி­ப­திகள் நிய­ம­னத்­துக்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் விண்­ணப்­பம் கோரப்­ப­டு­கையில் ‘ஆண்’ என்ற பதத்தை நீக்கி விடு­வதன் மூலம் இப்­ப­த­விக்கு பெண்­களும் விண்­ணப்­பிக்கம் சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வது வர­வேற்­கத்­தக்­கது எனவும் அவர் தெரி­வித்தார்.

பிர­த­மரைச் சந்­தித்த பெண் பிர­தி­நி­திகள் குழுவில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலை­மையில் ஹசனா சேகு இஸ்­ஸதீன் ,ஹிஷ்­யாமா ஹமின், பாத்­திமா சப்ரா ஜாஹிட், பாத்­திமா அமானா மற்றும் சட்­டத்­தர­ணி எர்மிசா தேகல் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

முஸ்லிம் பெண் பிரதிநிதிகளின் கோரிக்கையை செவிமடுத்த பிரதமர் தினேஷ்குணவர்தன முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த சிபாரிசுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.