நஷ்டஈடுகளை விரைவுபடுத்த இலங்கை – சவூதி உடன்படிக்கை

சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் வாகன விபத்­து­களில் மற்றும் தொழில் புரியும் இடங்­களில் விபத்து சம்­ப­வங்­களில் உயிர் துறந்தால் அவர்­க­ளது குடும்­பத்­த­வர்கள் விரைவில் உரிய நஷ்ட ஈடு­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் அந்­நாட்டின் சட்ட நிறு­வனம் ஒன்­றுடன் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. இந்த உடன்­ப­டிக்­கை­யின்­படி திடீர் வாகன விபத்­து­களில் மற்றும் வேலைத் தளங்­களில் பணி­பு­ரியும் போது மூன்றாம் தரப்­பு­களின் கவ­ன­யீ­னத்தால் ஏற்­படும் விபத்­துக்­களில் எவரும்…

‘வஹா­ப்’ அடிப்படைவாதத்திற்கு எதிராக நுகேகொடையில் பேரணி

வஹாப் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக மக்கள் பேர­ணி­யொன்று இன்று நுகே­கொடை ஆனந்த சம­ரகோன் திறந்த வெளி­ய­ரங்கில் பிற்­பகல் 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. மக்கள் பேர­ணிக்­கான ஏற்­பா­டு­களை பேரா­சி­ரியர் இந்து தம்­ம­ர­தன தேரர் மேற்­கொண்­டுள்ளார். இலங்­கையில் வஹா­பிசம் போஷிக்­கப்­ப­டு­வ­தற்கும், அடிப்­ப­டை­வா­தத்­தையும், வஹா­பி­சத்­தையும் ஆத­ரிக்கும், பாது­காக்கும் அமைச்­சர்­க­ளுக்கும், அமெ­ரிக்­காவின் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக இந்த மக்கள் பேரணி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக…

அரச அலுவலகங்களில் அபாயா அணிய தடுத்ததாக முறைப்பாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்போம்

தங்­க­ளது கலா­சார ஆடை­களை அணிந்து கட­மைக்குச் சென்ற சில அரச ஊழி­யர்கள் அவர்க­ளது அலு­வ­ல­கங்­களில் தொல்­லை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக எமக்கு அறிக்­கைகள் கிடைத்­தன. அதற்­காக நாம் வருந்­து­கிறோம். இது தொடர்­பாக ஏதும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்­றுக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுப்போம் என பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். ஆங்­கில ஊட­க­மொன்­றி­னது நேர்­கா­ண­லின்­போது அரச முஸ்லிம் பெண் ஊழி­யர்­க­ளது ஆடை தொடர்­பாக வின­வப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப்…

கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்

எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார தேரர் தெரிவித்துள்­ளதால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். எனவே அந்த மாநாட்­டினை நடத்­தாது நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பெற்றுக் கொள்­ளு­மாறு முஸ்லிம்களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. முஸ்­லிம்­களின் உரி­மை­களைப்…