அம்பாறை சம்பவ நஷ்டயீட்டுக்கு 10 மில்லியன் நிதி அனுப்பப்பட்டது

0 613

கடந்த 2018 ஆம் ஆண்டு அம்­பா­றையில் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு முதற்­கட்­ட­மாக விரைவில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணி­ய­கத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

இதே வேளை அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் நீண்­ட­காலம் இடம்­பெ­யர்ந்­தோ­ருக்­கான மீள் குடி­யேற்ற செய­ல­ணியின் நிதி­யி­லி­ருந்தும் 6 மில்­லியன் ரூபாவை நஷ்ட ஈடுகள் வழங்­கு­வ­தற்கு ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

வன்­செ­யல்­க­ளினால் சேத­மாக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு 26 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பாதிக்­கப்­பட்ட ஏனைய 13 சொத்­து­க­ளுக்கு 3.6 மில்­லியன் ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் அவர் கூறினார். பாதிக்­கப்­பட்ட ஏனைய 13 சொத்­துக்­க­ளுக்கு தற்­போது திறை­சே­ரி­யினால் வழங்­கப்­பட்­டுள்ள 10 மில்­லியன் ரூபா­வி­லி­ருந்து முதற்­கட்­ட­மாக ஒரு இலட்சம் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கண்டி – திகன வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட்­டது போன்று அம்­பாறை வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்கும் கட்டம் கட்­ட­மா­கவே நஷ்டஈடுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அம்­பாறை நஷ்டஈடு­களை துரி­தப்­ப­டுத்­தும்­படி புனர்­வாழ்வு அமைச்­சுக்குப் பொறுப்­பா­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க உத்­த­ர­விட்­டுள்ளார்.
அம்­பா­றையில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான ஹோட்டலில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தினருக்கு உணவு பரிமாறப்படுவதாகக் கூறி அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.