திகன வன்முறைச் சம்பவம் ; அமித் வீரசிங்க உட்பட 13 பேருக்கு அழைப்பு

0 1,497

திகன வன்­முறைச் சம்­பவம் தொடர்­பான சந்­தேக நபர் மஹசோன் பல­காயத் தலைவர் அமித் ஜீவன் வீர­சிங்க உட்­பட 13 சந்­தேக நபர்­களை அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி மீண்டும் தெல்­தெ­னிய நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்ற நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி திகன தெல்­தெ­னிய நகரப் பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்கள் மீதான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பாக சந்­தே­கத்தின் பேரில் தெல்­தெ­னிய பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு தெல்­தெ­னிய நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு நீண்ட நாள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மஹசோன் பல­காய தலைவர் அமித் ஜீவன் வீர­சிங்க உட்­பட 13 சந்­தேக நபர்­களும் பின்னர் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்கள் மீண்டும் தெல்­தெ­னிய நீதி­மன்ற நீதிவான் சாணக்க கலன்­சூ­ரிய முன்­னி­லையில் நேற்று முன்­தினம் ஆஜ­ரா­கிய போதே நீதிவான் அமித் வீர­சிங்க உட்­பட 13 சந்­தேக நபர்­க­ளையும் 2020 பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி காலை 11 மணிக்கு தெல்­தெ­னிய நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மா­றும் நீதிவான் சாணக்க கலன்­சூ­ரிய உத்­த­ர­விட்­டுள்ளார்.

இச் சந்­தேக நபர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­வித்து அறிக்கை ஒன்­றினை மன்றில் மேல­திக அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்த பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகவும் பி. அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.