அபாயா , ஹிஜாப் அணிய தடை : அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல்

0 1,101

அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கட­மையில் ஈடு­பட பாட­சாலை நிரு­வா­கமும் அர­சாங்­கமும் தடை விதித்­துள்­ள­மையை இடை­நி­றுத்தி உத்­த­ர­வி­டு­மாறு கோரி முஸ்லிம் பெண் ஆசி­ரியை ஒருவர் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மனுவை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள உச்ச நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

கண்­டியைச் சேர்ந்த மொஹமட் இப்­ராஹிம் பாத்­திமா சஹ்ரின் (44) எனும் ஆசி­ரியை சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட குறித்த மனுவை எதிர்­வரும் செப்­டம்பர் 4 ஆம் திகதி உச்ச நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான சிசிர டி ஆப்ரு, முருது பெர்­னாண்டோ, எஸ்.துரை­ராஜா ஆகியோர் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளவே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.பொது நிர்­வாக அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட 13/2019 இலக்கம் கொண்ட சுற்­ற­றிக்கை அபாயா அணியும் உரி­மையை மறுப்­ப­தாக மனு­தாரர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே­வேளை, சட்ட மாஅ­திபர் சார்பில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் இந்­திக்க தெமுனு டி சில்வா, இந்த மனு­தாக்கல் செய்­யப்­பட்­டதன் பின்னர் 26.06.2019 திக­தி­யி­டப்­பட்ட திருத்­தப்­பட்ட புதிய பொது நிரு­வாக சுற்­ற­றிக்­கை­யொன்று வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அதில் அபாயா, ஹிஜாப் போன்­ற­வற்றை அணி­வது தடை­செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்­றத்தில் அறி­வித்தார்.

இந்த நிலை­வரம் மனு­தா­ர­ருக்கு விளக்­கப்­பட்­ட­தோடு மேல­திக விசா­ர­ணையை செப்­டம்பர் 04 ஆம் திகதி நடத்­து­வ­தென நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. அரசு சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி குறிப்­பிட்­ட­தைப்­போன்று அபாயா, ஹிஜாப் அணி­வ­தற்கு தற்­போது தடை­யி­ருக்­கின்­றதா, இல்­லையா? என்­ப­தைப்­பற்றி ஆரா­யவும் இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

13/2019 இலக்­க­மு­டை­யதும் 2019 மே 29 ஆம் திக­தி­யு­டை­ய­து­மான பொது நிரு­வாக சுற்­ற­றிக்கை பற்றி அறிந்­தி­ராத நிலையில் வழ­மை­போன்று 31 ஆம் திகதி பணிக்குச் சென்­ற­போது பொது­நி­ரு­வாக சுற்­ற­றிக்­கையின் பிர­காரம் சேலை அணிந்து வரு­மாறு பாட­சாலை அதிபர் தம்மை கோரி­ய­தாக மனு­தா­ர­ரான ஆசி­ரியை நீதி­மன்­றத்தில் தெரி­வித்தார். அவர் தன்­னு­டைய மனுவில் பொது­நி­ரு­வாக, அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் செயலாளர், ரணபிம ரோயல் கல்லூரி அதிபர், சட்ட மாஅதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

குரல்கள் இயக்கத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.