ரபாவையும் தரைமட்டமாக்கத் துடிக்கும் இஸ்ரேல்

0 62

ஏ.ஆர்.ஏ.பரீல்

ரஃபா பகு­தி­யி­லி­ருந்தும் வெளி­யே­று­மாறு இஸ்­ரே­லிய இரா­ணுவம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. காஸாவின் கிழக்குப் பிர­தே­சத்தின் மீது இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இஸ்ரேல் இரா­ணுவம் ரஃபா மீது கடு­மை­யான குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்­டது. இந்தத் தாக்­கு­தலில் எட்டு சிறு­வர்கள் உட்­பட 22 பேர் பலி­யா­னார்கள். இதே­வேளை ஹமாஸ் கரெம் அபூ­சலம் குறுக்குப் பாதை மீது ஏவு­கணைத் தாக்­கு­தலை மேற்­கொண்­டதால் இஸ்­ரேலின் மூன்று இரா­ணு­வத்­தினர் பலி­யா­னார்கள்.

ரஃபா மீது தரை வழித் தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள வேண்டாம் என கடந்த பல மாத கால­மாக உலக தலை­வர்­களும், இராஜ தந்­தி­ரி­களும் இஸ்­ரே­லிடம் பல தட­வைகள் கோரி­யி­ருந்­தன. உதவி வழங்கும் நிறு­வ­னங்­களும் இத்­த­கைய கோரிக்­கையை விடுத்­தி­ருந்­தன.

ரஃபா மீது மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள தரை வழித்­தாக்­குதல் காஸா மீதான மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்கு தடை­யாக அமையும். அத்­தோடு சவப்­பெட்டி மீது இறுதி ஆணி அடிப்­ப­தாக அமையும் என ஐ.நா. பொதுச் செய­லாளர் அந்­தோ­னியோ குட்­டரெஸ் தெரி­வித்­துள்ளார்.

‘எந்­த­வொரு தரை வழித் தாக்­கு­தலும் இன்­னல்­க­ளையும் உயி­ரி­ழப்­பு­க­ளை­யுமே ஏற்­ப­டுத்தும் என மனி­தா­பி­மான உத­விகள் விவ­கார ஐ.நா. அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. சுமார் ஒரு மில்­லியன் பலஸ்தீன் அக­திகள் ரஃபாவில் தஞ்சம் புகுந்­துள்­ள­தா­கவும் இவ் அலு­வ­லகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. ரஃபாவின் மீது தரை­வழித் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் ரஃபா சிவி­லி­யன்­களைப் படு­கொலை செய்யும் நிலை­ய­மாக மாற்­றம்­பெறும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.
இஸ்ரேல் ரஃபா மீது தாக்­குதல் நடாத்­து­வது முழு­மை­யாக ஏற்றுக் கொள்ளப்பட முடி­யா­தது என ஐரோப்­பிய கமி­ஷனின் தலைவர் உர்­சுலா வொண்டர் லெயன் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு ரஃபா மீது இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்ளக் கூடாது. அவ்­வாறு மேற்­கொண்டால் அது மிகவும் மோச­மான நிலை­மை­யினை ஏற்­ப­டுத்தி விடும். ரஃபாவில் மனி­தா­பி­மான நிலைமை தற்­போது மோச­ம­டைந்­துள்ள நிலையில் தாக்­குதல் மேற்­கொள்­வது பெரும் ஆபத்­தாக அமையும்’ என ஐரோப்­பிய யூனி­யனின் 26 நாடு­களின் வெளி விவ­கார அமைச்­சர்கள் இணைந்து அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளார்கள்.

அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் ரஃபா மீதான தாக்­குதல் திட்­டத்தை தொடர்ந்து பல தட­வைகள் எதிர்த்து வந்­துள்­ளனர். இஸ்­ரேலை எச்­ச­ரித்­துள்­ளனர். அமெ­ரிக்க அதிபர் தரை வழித்­தாக்­கு­தலை மேற்­கொள்ள வேண்டாம் என இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­குவை தொட­ராக அறி­வு­றுத்தி வந்­துள்ளார். எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார். தாக்­கு­தல்­களைத் திட்­ட­மி­டாது அப்­ப­கு­திக்கு மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கு­மாறும் அங்கு தஞ்சம் புகுந்­துள்ள பலஸ்­தீன மக்­களின் நலன் மீது கரி­சனை கொள்­ளு­மாறும் இஸ்­ரே­லிய பிர­த­மரை வேண்­டி­யுள்ளார்.

ரஃபாவில் மனி­தா­பி­மான நிவா­ர­ணங்­களின் தேவைப்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்டால் அவர்­க­ளது நிலைமை பெரும் ஆபத்­துக்­குள்­ளாகும். மில்­லியன் கணக்­கான மக்கள் வேறு எங்கும் வெளி­யேற முடி­யாத நிலைக்­குள்­ளாக்­கப்­ப­டு­வார்கள் என நோர்வே அக­திகள் கவுன்ஸில் தெரி­வித்­துள்­ளது. மேலும் பல உதவி வழங்கும் நிறு­வ­னங்கள் ரஃபா மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளதை எச்­ச­ரித்­துள்­ளன.

இஸ்ரேல் அமெ­ரிக்­கா­விடம் விளக்கம்
காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா மீது இஸ்ரேல் முழு­மை­யான இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்­துள்­ள­தை­ய­டுத்து அங்­குள்ள பலஸ்­தீ­னர்­களை இவ்­வாரம் அங்­கி­ருந்தும் வெளி­யேற்­று­வது தொடர்­பான தனது திட்­டத்தை இஸ்ரேல் பைடன் நிர்­வா­கத்­திடம் விளக்­கி­யுள்­ள­தாக பெயர் குறிப்­பிட விரும்­பாத அமெ­ரிக்க அதி­கா­ரிகள் அசோ­சி­யேடட் பிரஸ் நிவ்ஸ் ஏஜன்­சி­யிடம் தெரி­வித்­துள்­ளனர்.

இஸ்ரேல், அமெ­ரிக்க நிர்­வா­கத்தின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி ரஃபா மீது மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள இரா­ணுவ நட­வ­டிக்கை அங்­குள்ள அப்­பாவி பலஸ்­தீ­னர்­களை அபா­யத்­துக்­குள்­ளாக்­கி­விடும் எனவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
இஸ்­ரேலின் ரஃபா மீதான இரா­ணுவ நட­வ­டிக்­கையின் போது சிவி­லி­யன்கள் பாது­காக்­கப்­ப­டு­வ­தற்­கான எவ்­வித திட்­டமும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் அந்­தனி பிளின்கன் கடந்த வாரம் தெரி­வித்தார்.

பிராந்­திய மற்றும் சர்­வ­தேச சமூ­கத்திள் உறுப்­பி­னர்கள் இஸ்ரேல் ரஃபா மீது தாக்­குதல் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­மைக்கு பலத்த எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்­ளனர். யுத்தம் கார­ண­மாக பலஸ்­தீனின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் வெளி­யே­றிய மக்­களின் இறுதி அகதி முகா­மாக ரஃபாவே அமைந்­துள்­ளது என்­பதை அவர்கள் சுட்டிக் காட்­டி­யுள்­ளனர்.

ஒரு இலட்சம் பேர் வெளி­யேற்­றப்­ப­டுவர்
கிழக்கு ரஃபா­வி­லி­ருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் என இஸ்­ரே­லிய இரா­ணுவம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்­துள்­ளது. அங்கு தரை வழித் தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தற்­கா­கவே அவர்கள் வெளி­யேற்­றப்­ப­ட­வுள்­ளனர் எனவும் இஸ்­ரே­லிய இரா­ணுவம் குறிப்­பிட்­டுள்­ளது.

ரஃபாவில் இஸ்ரேல் மேற்­கொள்­ள­வுள்ள இரா­ணுவ நட­வ­டிக்கை அங்கு அக­தி­க­ளாக தஞ்சம் புகுந்­துள்ள 1.5 மில்­லியன் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு பெரும் ஆபத்­தாக அமை­யும்­என சர்­வ­தேச சமூகம் எச்­ச­ரித்­துள்­ளது.

போர் நிறுத்த பேச்­சு­வார்த்தை தோல்வி
ரஃபா­வி­லி­ருந்தும் மக்­களை வெளி­யே­று­மாறு இஸ்ரேல் இரா­ணுவம் உத்­த­ர­விட்­டுள்­ளமை கெய்­ரோவில் இடம்­பெற்­று­வரும் யுத்த நிறுத்த பேச்­சு­வார்த்­தையின் தோல்­வி­யையே எதிர்வு கூறு­கி­றது. அத்­தோடு இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகுவின் ரஃபா மீதான ஆக்­கி­ர­மிப்பை உறு­திப்­ப­டுத்­து­கி­றது என அல்­ஜெ­ஸீரா ஊட­க­வி­ய­லாளர் ஹானி மஹ்மூத் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். இதே­வேளை, கரெம் அபு சலம் மீது ஹமாஸ் மேற்­கொண்ட தாக்­குதல் நட­வ­டிக்­கையும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் இரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது. இஸ்­ரே­லிய இரா­ணுவம் உட­ன­டி­யாக அல் மவாசி பகு­தி­யி­லி­ருந்து மக்­களை வெளி­யே­று­மாறு கோரி­யுள்­ளது. இப்­பி­ர­தேசம் முன்பு இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தி­னரால் பாது­காப்பு வலயம் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­வேளை சிரேஷ்ட ஹமாஸ் உறுப்­பினர் இஸ்­ரே­லிய பிர­தமர் தற்­போது நடை­பெற்று வரும்­யுத்த நிறுத்த பேச்­சு­வார்த்­தையை ஸ்தம்­பிக்கச் செய்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

சில தினங்­க­ளுக்கு முன்பு இரு தரப்­பி­னரும் யுத்த நிறுத்தம் தொடர்பில் ஓர் உடன்­ப­டிக்­கைக்கு வர­வி­ருந்­தனர். ஆனால் இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யாகு ரஃபா மீதான தாக்­கு­தலைத் திட்­ட­மிட்­டதால் யுத்த நிறுத்தம் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது.

ரஃபா மீதான தாக்­குதல் ஹமாஸின் யுத்த நிறுத்தம் தொடர்­பி­லான கோரிக்­கையில் தளர்­வினை ஏற்­ப­டுத்தும் என நியுயோர்க் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

யுத்த நிறுத்த உடன்­ப­டிக்­கைக்கு நாங்கள் மிகவும் நெருங்­கி­யி­ருந்த நிலையில் நெதன்­யாகு உடன்­ப­டிக்­கையை சிதைக்கும் நிலை­யிலே இருக்­கிறார் என ஹமாஸின் சிரேஷ்ட அதி­காரி அபு­மர்சூக் தெரி­வித்­துள்ளார்.

யுத்த நிறுத்த பிரே­ரணை
கட்டார் மற்றும் எகிப்­திய மத்­தி­யஸ்­தர்­களால் முன்­வைக்­கப்­பட்ட யுத்த நிறுத்த பிரே­ரணையை தாம் ஏற்றுக் கொள்­வ­தாக ஹமாஸ் இயக்­கத்தின் தலைவர் இஸ்­மாயில் ஹானியா தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை யுத்த நிறுத்த பிரே­ரணை இஸ்­ரேலின் கோரிக்­கை­களை உள்­ள­டக்­கி­ய­தாக இல்லை என இஸ்ரேல் பிர­த­மரின் காரி­யா­லயம் தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் இஸ்ரேல் அர­சாங்கம் யுத்த நிறுத்த பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொள்­வ­தற்­காக தூதுக் குழு­வொன்­றினை அனுப்பி வைக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு இஸ்­ரேலின் போர் அமைச்­ச­ரவை, இஸ்ரேல் ரஃபா மீது தாக்­கு­தல்கள் தொடர்ந்து நடத்­தப்­பட வேண்­டு­மென தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. ஐ.நா. மற்றும் உதவி வழங்கும் நிறு­வ­னங்கள் ரஃபா மீதான இரா­ணுவ நட­வ­டிக்கை நிலைமை பெரும் ஆபத்­துக்குள் தள்­ளி­விடும் என எச்­ச­ரித்­துள்­ளன.

ரஃபா­வி­லி­ருந்து மக்­களை வெளி­யே­று­மாறு இஸ்ரேல் இரா­ணுவம் உத்­த­ர­விட்­டுள்ள நிலையில் ரஃபா மீது கடந்த திங்கள் இரவு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அசோசியேடட் செய்திச் சேவை தெரி­வித்­துள்­ளது. இஸ்­ரே­லிய யுத்த தாங்­கிகள் ரஃபா – எகிப்து எல்­லையில் தாக்­கு­தலை மேற்கொண்டதால் 12 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் மேற்­கொண்டு வரும் யுத்தம் கார­ண­மாக சுமார் 34,735 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். சுமார் 78,108 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இதே­வேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்­கொண்ட அக்­டோபர் 7 தாக்­குதல் கார­ண­மாக இது­வரை 1,139 இஸ்­ரே­லி­யர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். நூற்­றுக்கு மேற்­பட்டோர் ஹமா­ஸினால் பணயக் கைதி­க­ளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.