ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை

0 158

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்­டா­வுக்கு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும், வதந்­தி­களை நம்பி ஏமாற வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு பொது­மக்­களைக் கேட்­டுள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் கருத்து தெரி­விக்­கையில், ‘ஹஜ் தூதுக் குழுவில் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்த புத்­த­சா­சன, மத விவ­கார மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் இலங்­கைக்கு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா கோரி­யி­ருந்தார். ஆனால் மேல­திக கோட்டா சவூதி ஹஜ் அமைச்­சினால் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் இலங்­கைக்கு 500 ஹஜ் கோட்டா மேல­தி­க­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுமார் 700 பேர் ஹஜ் யாத்­திரை செல்­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கி­றது. பல ஹஜ் முக­வர்­களும் மேல­திக கோட்­டாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அழைத்துச் செல்­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் வதந்­திகள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கைக்கு மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்றால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.