ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகல்

பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் சக்திவள அமைச்சர் சாத் ஷெரிதா அல்-காபி திங்கட்கிழமையன்று அறிவித்தார். உலக எண்ணெய் உற்பத்தியில் நாற்பது வீதத்தினை கட்டார் பெற்றோலியம் என்ற நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியதையடுத்தே எண்ணெய் உற்பத்தி செய்யும் 15 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தோஹாவில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அல்-காபி கட்டாரின் விலகிக் கொள்ளும் தீர்மானம் எதிர்வரும்…

நாட்டில் அரசாங்கம் இல்லை; நான் மட்டுமே அதிகாரத்தில் அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது என்கிறார் ஜனாதிபதி

நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, ஜனாதிபதி நான் மட்டுமே அதிகாரத்தில் உள்ளேன். அடுத்த 24 மணி நேரத்தில் எனக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கத்தை அமைத்துவிட்டு உடனடியாக பாதுகாப்பு சபையை கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வு பெற்றுத் தருகின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான…

பிரதமர், அமைச்சரவை தொடர்வது நீதிமன்றை அவமதிப்பதாக அமையும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு குறித்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்தப் பதவிகளை இனிமேலும் தொடர்ந்தால்,  அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்…

பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு

பஹ்ரைன் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரிகளால் வர்ணிக்கப்படும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக பஹ்ரைன் பாராளுமன்றத்திற்கு அதிக எண்ணிக்கையான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைனைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என பஹ்ரைன் குடிமக்களுக்கான அமைப்பின் பேச்சாளர் மொஹமட் அல்-செய்யிட் அல்-அரபிய்யா ஆங்கில செய்திச் அலைவரிசைக்குத் தெரிவித்தார். உண்மையிலேயே எமது பாராளுமன்றத்தில் அதிக பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்,இது உண்மையில்…