புத்தளம் மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவாக்காட்டு பிரதேசத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளம் மக்கள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக கடந்த 19 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்த துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் மகஜர்களைக் கையளித்திருந்தனர்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.…