இந்தோனேசியா வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இந்தோனேசியா வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் நேற்று மற்றும் முன்தினம் பெய்த  கடும் மழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர், இனிநிலையில் குறைந்தது 40 பேர் பலியாகி இருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்கு சுலாவேசியின் 10 மாவட்டங்களில் இருந்து 3400 இற்கும் கூடுதலானோரை பாடசாலைகள், பள்ளிவாசல்கள்…

அடுத்த ஜனாதிபதி வேட்பளர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார் வெல்கம தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வருட இறுதியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னர் தற்போதைக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். கொலைகார வரலாற்றைக்…

இலங்கை பணியாளர்கள் தொடர்பில் பொறுப்பின்றி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் தொடர்பான செய்திகளை தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினர்கள் பொறுப்பில்லாமல் நெறிமுறையற்ற வகையில் காணொளிகள் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இது போன்ற நடவடிக்கைகள் அவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் தற்போதைய செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. என சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட காணொளியில்…

ஜனாதிபதி மூன்று மாதங்களாக சபை அமர்வில் பங்கேற்கவில்லை

ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒருமுறையேனும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வேண்டுமென அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று மாதங்கள் கடந்தும் சபைக்கு வரவில்லை. இதுதொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27/2 விசேட கூற்றை முன்வைத்து…