ஹஜ் ஏற்பாடுகளுக்கு தடைகள் எதுவுமில்லை

மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

0 162

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்­டாக்­களை இரத்துச் செய்து மீள பகிர்ந்­த­ளிக்­கும்­படி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்த உத்­த­ர­வினை கடந்த திங்கட்கிழமை உச்ச நீதி­மன்றம் இரத்துச் செய்­தது.

உச்ச நீதி­மன்றின் குறிப்­பிட்ட உத்­த­ர­வி­னை­ய­டுத்து இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித தடை­களோ பிரச்­சி­னை­களோ இல்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அரச ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் ஹஜ் ஏற்­பா­டு­களை வழ­மைப்­போன்று முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

அரச ஹஜ் குழு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­பினை எதிர்த்து உச்ச நீதி­மன்றில் மனுத் தாக்கல் செய்­த­தை­ய­டுத்தே இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நீதி­ய­ரசர் முர்து பர்­ணாந்து தலை­மை­யி­லான மூவ­ர­டங்­கிய நீதி­ய­ரசர் குழாம் இத்­தீர்ப்­பினை வழங்­கி­யது.

யுனைடட் டிரவல்ஸ் ஹஜ் முகவர் நிலையம் இவ்­வ­ருட ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், நீதி­மன்றின் ஹஜ் வழி­காட்­டல்கள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை எனவும் தனக்கு இரண்டு வருட கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றம் சுமத்தி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்­தது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் பகி­ரப்­பட்­டுள்ள ஹஜ் கோட்­டாவை இரத்துச் செய்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்த அதே­வேளை குறிப்­பிட்ட ஹஜ் முகவர் நிலை­யத்­துக்கு கோட்டா வழங்க வேண்டும் என உத்­த­ர­விட்­டி­ருக்­க­வில்லை.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் உத்­த­ரவு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்­தாது என கடந்த மாதம் 26ஆம் திகதி விளக்­க­ம­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.உச்ச நீதி­மன்றில் அரச ஹஜ் குழுவின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, சட்­டத்­த­ரணி சிபான் மஹ்ரூப் என்போர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விராஜ் தயா­ரத்­னவும், யுனைடட் டிரவல்ஸ் ஹஜ் முகவர் நிலை­யத்தின் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் சஹீதா பாரி மற்றும் ஹபீல் பாரிஸ் என்போர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இவ்­வ­ருட ஹஜ் விவ­காரம் நீதி­மன்றில் சவா­லுக்­குள்­ளான நிலையில் குறிப்­பிட்ட முகவர் நிலை­யத்­துக்கும் , அரச ஹஜ் குழு­வுக்கும் இடையில் இணக்­கப்­பாடு ஒன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல தரப்­பினர் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்த நிலையில் எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான சிக்­கல்­கள் ஏற்­ப­டு­வதை தவிர்க்கும் பொருட்டு அரச ஹஜ் குழு இவ்­வி­வ­கா­ரத்தை நீதி­மன்றின் மூலமே தீர்த்துக் கொள்­வ­தற்கு உறுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.