இஸ்ரே­லிய மாணவி அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொலை சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் நீடிப்பு

இஸ்­ரே­லிய மாண­வி­யொ­ரு­வரைக் கொன்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபரின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஜூன் மாதம் வரை அவுஸ்­தி­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று நீடித்­துள்­ளது. மேலும் சந்­தேக நப­ரினால் பிணை தொடர்பில் எவ்­வித கோரிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வில்­லை­யென நீதி­மன்ற பெண் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். அவுஸ்­தி­ரே­லி­யாவின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மெல்­பேர்னில் நண்­பர்­க­ளுடன் இரவைக் கழித்­து­விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்­து­கொண்­டி­ருந்த போது 21 வய­தான ஐயியா மாசர்வே கொல்­லப்­பட்டார்.…

நான் ஒருபோதும் அபாயாவுக்கு எதிரான கருத்துக்களை எங்கும் தெரிவிக்கவில்லை

கிழக்கு மாகா­ணத்தின் கல்­வியை சீர்­கு­லைக்கும் நோக்­குடன் செயற்­ப­டு­கின்ற சில தீய சக்­தி­களே என் மீது அபாண்­டங்­களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்­பாளர் பத­வியில் இருந்து துரத்த  எத்­த­னிக்­கின்­றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்­பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரி­வித்தார். சமூக வலைத்­த­ளங்­களில் தன் மீது பரப்­பப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கிழக்கு மாகா­ணத்தின் கல்விப் பின்­ன­டை­வுக்கு…

சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து மீண்டும் ரோஹிங்ய முஸ்­லிம்கள் வெளி­யேற்றம்

250 ரோஹிங்ய ஆண்­களை பங்­க­ளா­தே­ஷுக்கு அனுப்பி வைக்க சவூதி அரே­பியா திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் இது இந்த ஆண்டின் இரண்­டா­வது வெளி­யேற்­ற­மாகும் எனவும் செயற்­பாட்­டாளர் ஒருவர் தெரி­வித்தார். அவர்கள் பங்­க­ளா­தேஷை சென்­ற­டைந்­ததும் அவர்கள் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள் எனத் தெரி­வித்­துள்ள ரோஹிங்ய சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­சார இணைப்­பா­ள­ரான நேய் சான்ல்வின் இவ்­வாறு நாடு­க­டத்தும் செயற்­பாட்டை நிறுத்­து­மாறும் அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். சவூதி அரே­பியா மூன்று இலட்சம் ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு…

மாகா­ண­சபை தேர்­தலை விரை­வாக நடத்த கோரி கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்போம்

மாகாண சபை தேர்­தல்கள் விரை­வாக நடத்­தப்­பட வேண்டும் என்ற அழுத்­தத்தை பிர­யோ­கிப்­ப­தனை இலக்­காக கொண்டு, அதற்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை இனி­வரும் காலங்­களில் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தெரி­வித்­துள்­ளது. நெலும் மாவத்­தையில் உள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சித் தலை­மை­ய­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜீ.எல்.பீரிஸ் மேற்­கண்ட கருத்தை வெளி­யிட்டார். கடந்த தேர்­தல்­களில் வட மாகா­ணத்தில் தமிழ் தேசியக்…