2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231 கிலோ ஹெரோயின் சிக்கியது

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 778  மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 231 கிலோ 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த போதைப்பொருள் தொகையானது இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது அதிகூடிய தொகையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . பொலிஸ்…

பாராளுமன்றை கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடை நாளை வரை நீடிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த நவம்பர் 9 ஆம் திகதி  கலைத்த 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நாளை சனிக்கிழமை வரை நீடிக்கப்ப்ட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது நேற்று 3ஆவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே, நேற்றைய விசாரணைகளின் நிறைவில் இதனை பிரதம நீதியரசர் நலின் பெரேரா அறிவித்தார். ஏற்கனவே உயர் நீதிமன்றினால் குறித்த மனுக்களை விசாரணைச் எய்ய நிர்ணயிக்கப்பட்ட மூன்று…

இந்த வருடத்தில் மாத்திரம் ஹெரோயினுடன் தொடர்புடைய 37 ஆயிரம் பேர் கைது

நாடு பூராகவும்  இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  37 ஆயிரத்து  304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார் . பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற  ஊடகவியளாளர் சந்திப்பின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பூராகவும்…

வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு கட்டார் அமீருக்கு சவூதி மன்னர் அழைப்பு

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கட்டார் அமீர் செய்க் தமிம் பின் ஹமாட் அல் தானிக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார் என கட்டாரின் உத்தியோகபூர்வ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. கட்டாரின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிக ஆழமான சமிக்ஞையாக பகுப்பாய்வாளர்களினால் பார்க்கப்படும் பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் அறிவிப்பை அடுத்து கடந்த…