விடுவிக்கப்பட்ட காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க முடியாது

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார். மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின்…

சிரியாவில் உறையவைக்கும் குளிர் 15 சிறுவர்கள் பலி

பூச்சியத்தை விடவும் குறைந்த குளிர் மற்றும் மருத்துவ வசதியின்மை ஆகியவற்றினால் சிரியாவில் குறைந்தது 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. உறையவைக்கும் குளிர் காரணமாக சிரிய – ஜோர்தான் எல்லையில் அமைந்துள்ள ருக்பான் முகாமில் எட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான முகவரகமான யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பிற்கும், அமெரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வரும் சிரிய ஜனநாயகப் படைக்கும் இடையே வடகிழக்கு நகரான ஹாஜினில் நடைபெறும் மோதல்கள் காரணமாக…

ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயார்

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டால் தான் அத்தேர்தலில் அபேட்சகரக போட்டியிடத் தயாரென முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக் ஷ நேற்று அறிவித்தார். இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விஷேட நீதிமன்றில் இடம்பெற்றது. அவ்வழக்கில் ஆஜராகிவிட்டுத் திரும்பும்போது அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை…

சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசாரருக்கு மன்னிப்பு

ஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. அவரால் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது. சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி…