நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்த ஊழல்களை ஆராய ஆணைக்குழு  

கடந்த 2015 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில்  அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிக் குற்றங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் மேலும் நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடிகள் மற்றும் பாரிய குற்றங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக விமர்சனங்களை…

நிறைவேற்று அதிகாரமும் அடுத்த ஜனாதிபதி தேர்தலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக சட்டமாக்குவதற்கு எவரும் தயாரில்லை என்பதே வரலாறாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆராயப்படும் இத் தருணத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆனால் இதுவரை…

மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமில்லை மலேசியா அறிவிப்பு

மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாதென மலேசிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்ட மலேசிய வெளிநாட்டமைச்சர் சைபுத்தீன் அப்துல்லாஹ்,   நடைபெறவுள்ள பரா நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கு இஸ்ரேல் வீரருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். ஜுலை மாதம் இடம்பெறவுள்ள இப்போட்டி 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ பரா ஒலிப்பிக் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாகும். விளையாட்டு நிகழ்வுகளுக்காகவோ அல்லது வேறு எந்தவொரு நிகழ்வுக்காகவும்…

25 ஆம் திகதி ஜும்ஆ பிரசங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்பூட்டுக

எதிர்­வரும் 25ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் நடத்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வேண்­டு­மென அஞ்சல் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் கோரிக்கை விடுத்­துள்ளார் . இதே­வேளை எதிர்­வரும் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து அஹ­திய்யா பாட­சா­லைகள், அரபுக் கல்­லூ­ரிகள், குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வு நிகழ்ச்­சிகள் இடம்­பெற வேண்­டு­மெ­னவும் அவர்…